சிறுகதை

அஞ்சும் மூணும் எட்டு

c. 2014

ஜானகி தன்னைப்போல் சாருவை அடக்கி வளர்க்காமல், சுதந்திரமாக வளர்த்தாள். ஆனாலும் சாருவின் போக்கும் குணமும் அவளைப் பயமுறுத்தின. திருமணமான ஆறு மாதத்தில் சாருவிடமிருந்து வந்த கடிதம் ஒரு தெளிவைத் தருகிறது.

ஜன்னலைத் திறந்த போது சற்றுத் தொலைவில் மூர்த்தியும் சாருவும் நடந்து வருவது தெரிந்தது. வெள்ளைக் கற்சட்டையும், வெள்ளை நிக்கரும் போதாமல் போய்விட்டது போல், சாருவின் உடம்பைக் கவ்விப் பிடித்திருந்தன. வெளேரென்ற உடம்பும், மூங்கிலில் விளைந்தாற் போன்ற நெகுநெகுவென்ற வளர்த்தியும்....யாருடைய கண்ணாவது படப்போகிறதே என்றிருந்தது ஜானகிக்கு. டென்னி விளையாடியபின் உடைமாற்றிக் கொண்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாயிற்று. 'அம்மா, ஒரே பசி. ஐ'ம் கோயிங் டு ஆர்டர் பீட்ஸா' சொல்லிக் கொண்டே வந்தவளை இடைமறித்தாள் ஜானகி. 'சாரு, பீன் கறியும், மோர்க்குழம்பும் பண்ணி இருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு வா. சுடச்சுடச் சாப்பிடலாம்.' 'ஓ! நோ'ம்மா! ஐ ஜட் டோண்ட் ஃபீல் லைக் ஈட்டிங் ரை டுடே... ப்ளீ லெட் மீ ஆர்டர் பீட்ஸா டுகெதெர் வித் பெப்ஸி'. அநேக வியங்களில் சாரு இப்படித்தான். துடிப்பும், துள்ளலும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். ஏதேனும் ஒரு வியத்தில் ஜானகிக்கும் சாருவுக்கும் ஒருவிதமான நிழல்யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. 'என்னம்மா?' என்று தப்பித் தவறிக்கூட மூர்த்தி பெண்ணைக் கேட்டுவிடமாட்டார். அத்தனை அருமை! சாரு ஏதேனும் முதல்நாள் கேட்டு விட்டால், மறுநாளே அது உடனே அவள் கைக்கு வந்துவிடும். 'அப்பா, ஒன்று சொல்ல மறந்து விட்டேனே! எங்க காலேல எல்லோரும் எக்கர்ன் போக ப்ளான் பண்ணி இருக்கோம். இன்ஃபாக்ட், இந்தப் பிளானைச் சொன்னதே நான்தான். நல்ல ரெபான்....எங்க போறோம்னு தெரியுமா? டெல்லி, ரித்வார், முசெளரி என்று கம்ப்ளீட்டா நார்த் இந்தியா பக்கம்...ஜட் ஃபார் டென் டே.....' சாரு பேசிக் கொண்டே போக, ஜானகிக்குப் பொறுக்கவில்லை. 'தோ பாரு சாரு! அதெல்லாம் எதுவும் வேண்டாம். காலம் இருக்கும் இருப்பில், இப்படி எங்கானும் போய் வருவது அத்தனை சரியாப் படலை. அவ்வளவு தூரம் உன்னை அனுப்பிச்சிட்டு நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்க பார்த்தாலும் டிரைக்கும், டெரரிட் பயமும்........' 'டாப் இட்'மா! நான் மட்டுமா போறேன்? இட் வுட் பி எ த்ரில்லிங் அண்ட் அட்வெஞ்சர எக்பீரியன்.....நீ ஏதாவது ஏடகூடமா கற்பனை பண்ணிண்டு என்னோட 'மூடை'க் கெடுக்காதே. அப்பா, ஐ'ம் கோயிங்...... ஓகே?' 'தட் ஃபைன் சாரும்மா. பட் யூ ஹாவ் டு பி எக்ட்ரீம்லி கேர்ஃபுல்.... பணம் எவ்வளவு தேவைப்படும்னு சொல்லு'...சொல்லியபடியே மூர்த்தி எழுந்து கொண்டார். ஒரு கையில் பீட்ஸாவும், மறுகையில் பெப்ஸியுமாக 'அம்மா! இப்போ என்ன சொல்றே?' என்றபடியே சாரு நகர்ந்த போது கோபம் மண்டியது ஜானகிக்கு. மனது பொருமிக் கொண்டிருந்தது. 'இந்தப் பொண்ணுதான் ரெண்டுங்கெட்டான்...இளவயசு. கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருக்கு. இந்த மனுனுக்கு என்னாச்சு? ரெண்டு பேருக்கும் அப்படி என்ன அண்டர்டாண்டிங்கோ'...அவளால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. சொன்ன தினுசில், சரியாகப் பத்து தினங்களில் பயணம் போய்விட்டுச் சாரு வந்தாயிற்று. இன்னும் இரண்டு வாரங்களில் ஃபைனல் எக்ஸாம் என்பதால், படு மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். பரீ முடிந்தபின் விட்டுப் போன வாய்ப்பாட்டையும், வயலினையும் திரும்ப ஆரம்பிக்கச் சொல்லணும்.......அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சமைக்கப் பழக்கி விடணும்............. ஒருவழியாகத் தேர்வு முடிந்தது. இடம் போல் தொலைக்காட்சி பார்த்து செல்ஃபோனில் அரட்டை அடித்து, நேரம் காலமில்லாமல் ஊர் சுற்றி, ஜிம்முக்குப் போய்வந்து....நாட்கள் சென்று கொண்டிருந்தன. சாவகாசமாய் எழுந்துவந்த சாருவிடம் ப்ரெட் டோடைக் கொடுத்தபடியே, மெள்ள ஆரம்பித்தாள் ஜானகி. 'சாரும்மா! நாள் இப்படி ஓடிண்டே இருக்கே. சரோஜா டீச்சர் கிட்ட உன்னோட விட்டுப் போன பாட்டுக் கிளாசை ஆரம்பி. அப்படியே கிருணன் சாரிடமும் வயலின் கிளா பத்திப் பேசு'... 'உ...உடனே ஆரம்பிச்சுட்டியா? நான் அதெல்லாம் எதுவும் செய்யப் போறதில்ல...கார் டிரைவிங் கத்துக்கப் போறேன்.'...அத்தோட ஃபிரெஞ்ச் கத்துக்கப் போறேன்'.... ஜானகியின் கோபம் தலைக்கேறியது. 'சாரு, டிரைவிங்கும், ஃபிரெஞ்சும் கத்துண்டாக்க, தட்ல சாதம் வந்துடுமா? உருப்படியா தையல், பாட்டு சமையல்னு கத்துக்கிற வழியப்பாரு! நாம பெரிய ராயல் ஃபாமிலியா என்ன? மனசுல நீ என்னதான் நினச்சுண்டிருக்கியோ?....' 'அய்யோ...ப்ளீ அம்மா...கத்தாதே. பாட்டும் வயலினும் ஏழு வரும் கத்துண்டாச்சு...அதுனால டயம் கிடைக்கிறச்சே சும்மா பிராக்டீ பண்ணினாப் போதும்....ஜஸ்ட் ஐ ஹாவ் டு டெவலப் இட்..தட் ஆல். என்னை என் வழிலே போகவிடும்மா...சும்மா தொணதொணனு போரடிக்காதே'... பாப் தலையைச் சிலுப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள் சாரு. மூர்த்தியிடம் சொல்லி சொன்ன தினுசில், ஃபிரெஞ்சும், கார் டிரைவிங்கும் கற்றுக் கொள்ளச் சென்று வந்தாள். சரியாக எட்டே வாரங்களில் கையில் லைசென்ஸாடு வந்த போது, ஜானகி வாயடைத்துத் தான் போனாள்! நல்ல பெண், நல்ல அப்பா.....இப்படி எல்லாம் தன்னால் இருக்க முடிந்ததா? அப்பா அம்மா கிழித்த கோட்டைத் தாண்டாமல், எப்படி வளர்ந்தேன்! பெற்றோர்கள் மிகவும் அன்பானவர்களாக இருந்தாலும், எப்போதும் ஒருவித மிலிட்டரிக் கட்டுப்பாடு தான்! ஒரே பெண் என்பதற்காக எதையும் சொல்ல் விட முடியாது.....செய்து விட முடியாது. அப்பா எது சொன்னாலும் கேடாகணும்...அம்மா எது செய்தாலும் சாப்பிட்டாகணும்....எதிர்கேள்வியா? ...மூச்! அப்படி இருந்ததால் என்ன கெட்டுப் போயிற்று? கல்லுரி முடிந்த கையோடு, அப்பா திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்த போது, கொஞ்ச நாட்களுக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஜானகியின் ஆசை அப்படியே அடங்கிப் போனது. அவ்வளவு ஏன்? அவளை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், மூர்த்தியின் குடிம்பப் பின்னணியையும், உயர்பதவியையும் பார்த்து...'நல்ல வரன்...விட்டால் கிடைப்பது கடம்' என்ற ரீதியில் திரும்பத் திரும்பப் பேசிக் கல்யாணத்தையே முடித்து விட்டார்கள்! தன் அளவுக்கு அப்படி அடங்கிப் போகாமல், ஓரளவுக்குச் சுதந்திரம் கொடுத்துத் தன்னோட பெண்ணை வளர்க்கணும் என்று சாருவைச் சுதந்திரமாக வளர்த்தவளே ஜானகிதான்! இப்போ என்னடாவென்றால், சாருவின் போக்கும் குணமும் அவளை நிரம்பவே பயமுறுத்தின. காதைப் பொத்திக் கொண்டாள் ஜானகி. பெரிய வால்யூமில் சாருவின் அறையிலிருந்து மரியாகேரியின் பாப்ம்யூசிக்.....அவளது தோழிகள் வேறு வந்திருந்த படியால் உரத்த சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக இருந்தது. 'ஆன்ட்டி...கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?' என்றபடி வந்த பெண்ணின் தோள் பட்டையில் தேளும் பாம்புமாக டாட்டூ இருந்தது.... 'ஆன்ட்டி....உங்களுக்கு பகடீ, பாதா எல்லாம் பண்ணத் தெரியுமா? எங்க மம்மி அதுல பெரிய எக்பர்ட்' என்றாள். கொதித்துக் கொண்டிருந்த குழம்பின் சூடு ஜானகியின் பதிலில் தெரிந்தது.... 'அதெல்லாம் எனக்குத் தெரியாது.....அரையும் குறையுமா..வெந்ததும் வேகாததுமா.......என்ன பாதாவோ'..... 'களுக்'கென்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டது...'யூ ஆர் ராங் ஆன்ட்டி! செம ல்தியான, ரொம்ப ஃபில்லிங்கான அயிட்டம் அது தெரியுமா? இந்த சாதம், குழம்பு, கூட்டு, அப்பளம், வறுவல்னு.... அதுல தான் கொலட்ராலும், மாவுச்சத்தும் இருக்கு.' பெரிய ந்யூற்றிியன் மாதிரி அந்தப்பெண் பேசியபோது, ஜானகிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இந்தப் பெண்களோடு சேர்ந்துதான், சாருவும் எல்லாவற்றுக்கும் விதண்டாவாதம் செய்கிறாள்............ ஒருவழியாக அஎதப் பெண்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு, வீடே புயலுக்குப் பின் அமைதியான மாதிரி இருந்தது. 'அப்பாடி...என்ன பொண்ணுகளோ? எல்லாம் பிசாசுகள்! டைட்ஸும், ஜீன்ஸும், ஷார்ட்ஸுமாக....பொண்ணா லட்சணமா ஏதாவது ஒண்ணாவது இருக்கணுமே....சாருவே மாடர்னா வளைய வரும்போது என்னத்தைச் சொல்வது? சாருவின் ஃப்ரெண்ட் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதுவும் கட்டின பசுப் போல இருந்த மீரா, கொஞ்ச நாட்களுக்குமுன் அவர்க ளோடு படித்த ஆல்பர்ட்டைத் திருமணம் செய்து கொண்ட போது, ஆடிபோய் விட்டாள் ஜானகி. 'அம்மா! ஒரு பெண்ணும் ஆணும் ஜட் லைக் தட் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கிறது அவ்வளவு பெரிய வியமா என்ன? இட் தேர் லைஃப். இட்ஸ் பெட்டர் டு ஹாவ் ம்யூச்சுவல் அண்டர்டாண்டிங் பிஃபோர் த வெட்டிங். லவ் ஈ சம்திங் கிரேட் அண்ட் பியாண்ட் எவ்ரிதிங்'.... சாரு பேசிக் கொண்டே போனபோது, ஜானகியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்றிலிருந்து சாருவின் மீது தனியாகக் கண்பதித்துப் பரிசோதனை செய்தாள். சாருவின் புத்தக அலமாரியைக் குடையலானாள்...... சாரு யாரோடெல்லாம் பழகுகிறாள், பேசுகிறாள் என்றெல்லாம் ரகசியமாக ஸர்வே எடுத்தாள். அவ்வப்போது மூர்த்தியிடம் ஏதாவது சொல்லப் போனால், அவர் ரெளத்ர மூர்த்தி ஆகிவிடுவார்......... 'ஜானகி! இட் அட்டர் நான்சென். சாரு ஈ மை டாட்டர்.. டோண்ட் பி ஸில்லி'....அந்த 'மை' என்பதில் ஏக அழுத்தம் தெரியும். டெலிபோன் அடிக்கவே விரைந்து எடுத்தாள் ஜானகி. மூர்த்தி தான். 'ஜானா! உன்கிட்ட என் ஃபிரெண்ட் கோவர்த்தன் பத்திச் சொல்லி இருக்கேன் இல்லையா? வடக்கே ராஜதான் பக்கம் செட்டில் ஆகி இருக்கானாம். அவன் குடும்பத்தோட இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்திருக்கானாம்...அவனை இன்னிக்கு டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்கேன்...கிட்டத்தட்ட பத்து வருங்களுக்குப் பிறகு பார்க்கப் போறதால ரொம்பவும் எக்ஸட்டாயிட்டான்....' சரி என்றவள் மளமளவென்று சமையலில் இறங்கினாள். ரவா இட்லி க்ரீன்பீ புலாவ், பூந்தி ராய்தா, சேமியா பகளாபாத்...அத்துடன் டார்ட்டருக்கு உருளை போண்டாவும், அவல் கேசரியும்...கூடவே பொதினா சட்னியும். பைனாப்பிளையும், தர்ப்பூசணியையும் 'டை' மாதிரி அழகாக வெட்டி ஃபிர்ட்ஜில் வைத்தாள். எலுமிச்சை நன்னாரி சேர்த்து குளிபானமும் தயார் செய்துவிட்டு, ஜானகி ரெடியான போது சொல்லி வைத்தாற் போல் அனைவரும் வந்து விட்டார்கள். அதிக வேலையில் மும்முரமாக ஜானகி இருப்பது தெரிந்து, மேலும் அவள் வாயைக் கிளறாமல் பெண்ணாக லட்சணமாக, சாருவும் ஒரு சல்வாரில் வந்து எல்லோரையும் வரவேற்றாள். கோவர்த்தனும், அவர் மனைவி ராதாவும் மிகவும் சிலாகித்துச் சாப்பிட் டார்கள். 'வெரி நை வெரி நை' என்று அவர்கள் பிள்ளை சம்பத்தும் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டபோது ஜானகியின் மனது சந்தோத்தில் நிரம்பியது. அவர்கலின் எளிமையும், பழகுவதில் தென்பட்ட இனிமையும் அவர்களின் தரத்தைச் சொல்லாமல் சொல்லின. 'மூர்த்தி...இப்படிச் செய்தால் என்ன?..உன்னோட பெண் சாருவைச் சம்பத்துக்குப் பேசி முடித்து விட்டால்?'....... கோவர்த்தனின் வெளிப்படையான அணுகுமுறை, மூர்த்திக்குச் சந்தோ அதிர்ச்சியைக் கொடுத்தது. சம்பத்தைப் பார்த்ததிலிருந்து, அவருக்கும் அந்த எண்ணம் துளிர் விட்டிருந்தது. இந்தச் சின்ன வயதிலேயே ஒரு பெரிய இண்டர்நேனல் சாப்ஃபட்வேர் கம்பெனியில் டைரக்டராக இருந்தான். முன்னுக்கு வரக்கூடிய துடிப்பும், உயர்ந்த இலக்கை அடையக்கூடிய திறமையும், அவனது கண்ணியமான தோற்றமும் மூர்த்தியைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. யோஜிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு 'யெ' சொல்லி விடலாம் தான்...ஆனால் சாருவைக் கேட்காமல் அப்படியெல்லாம் சொல்ல அவர் விரும்பவில்லை. அதற்குள்ளாகச் சாருவும், சம்பத்தும்... அமெரிக்க அதிபதி தேர்தல் பற்றியும், ஒபாமாவின் கண்ணியமான மேடைப் பேச்சு பற்றியும், ஹிலாரி க்ளிண்டனின் தைர்யமான அணுகுமுறை பற்றியும்.....அலசிக் கொண்டிருந் தார்கள். கமலின் தசாவதரத்தையும் விட்டு வைக்கவில்லை. அவர்களின் இயல்பான பேச்சும், ஒருமித்த எண்ணமும் அவர்களை சற்றே நெருக்கத்துக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். கோவர்த்தனின் காள்விக்குப் பதில் சொல்லாமல், மூர்த்தி மிகுந்த யோஜனையுடன் சாருவைப் பார்த்த போது, கோவர்த்தன் சாருவிடமே கேட்டு விட்டார்.....'ஓ!....அங்கிள், என்னோட அப்பா எது சொன்னாலும் எது பண்ணினாலும் எனக்கு ஓகே'.. என்ற போது, சாருவின் திருமண வியம் அந்த நிமித்திலேயே நிச்சயமாகிப் போனது. அசுர வேகத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்து, இதோ சாருவின் கல்யாணம் முடிந்து விளையாட்டுப் போல் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஷாம்பூ தலை பறக்க, பாட்டும் சப்தமுமாக வளைய வந்து கொண்டிருந்த சாரு இல்லாமல் வீடு வீடாகவே இல்லை. அவள் போய் வந்த சுற்றுலாப் பயணம் போலவே....அவளது திருமணமும் ஒரு கணத்தில் முடிவானதுதான் ஜானகிக்கு இன்னமும் ஆச்சர்யத்தைத் தந்து கொண்டிருந்தது. ........அப்பாடி! என்னவெல்லாம் நினைத்துப் பயந்து கொண்டிருந்தேன். ...ஜானகிக்குத் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் சந்தோம்தான்... ஆனாலும் இயற்கையாகவே அவ்வப்போது எழும் பயம் அவளைக் கொஞ்சம் நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது...கல்யாணத்தின் போதுதான் சாருவின் புக்ககம் நிறையப்பேர் கொண்டது என்பது தெரிந்தது. சம்பத்தின் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, கஸின் கிட்ட...தூரத்துச் சொந்தம் என்று ஏகப்பட்ட பேர் வந்த போது, அவர்களைக் கவனிப்பதில், ஜானகியும் மூர்த்தியும் சற்றே திணறித்தான் போனார்கள். இத்தனை பெரிய குடும்பத்தில், இந்தப்பெண் சாரு எப்படிப் புகுந்து புறபட்டு வரப் போகிறதோ என்று இனந்தெரியாத கலக்கம் அவளிடத்தில் இருந்து கொண்டே தான் இருந்தது. இங்கிருந்த வரையில், கடுகு மிளகாய் தாளித்து ஒரு சமையல் செய்தோ, இரண்டிழை கோலம் போட்டு சுவாமி விளக்கேற்றியதோ இல்லை.... சாருவிடமிருந்து போன் வரும் போதெல்லாம்....ஏதேனும் புகார் சொல்வதக...குற்றம் காண்பதாகச் சொல்லி விடுவாளோ என்று மனது அடித்துக் கொள்ளும். டெலிபோன் மணி ஒலித்தது...'ஜானா! அடுத்த வாரம் நான் டெல்லிக்கு ஒரு கான்:ப்ரன்சுக்காகப் போகணும். அப்படியே போய் சனி...ஞாயிறன்று நம்ப சாருவைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.' மூர்த்தி சொன்னதுதான் தாமதம்....உடனே சாரு மிகவும் விரும்பிச் சாப்பிடும் பத்த லாடும், ரிப்பன் பக்கோடாவும் பாக் செய்தாள். கல்யாணத்தின் போது த்ரட்டுப்பால் என்றால் தனக்கு ரொம்ப இடம் என்று சம்பத் சொன்னது நினைவுக்கு வரவே அதையும் டப்பர்வேரில் போட்டு வைத்தாள். சாருவுக்கு ஒரு லெங்காவும், புது மோதரில் வந்திருக்கும் ஜட் ப்ராலெட்டும் வைத்து கிஃப்ட்ராப் செய்தாள். ராதாவிற்கு ஒரு வெங்கிடகிரி புடவையும் கோவர்த்தனுக்கு அருணாசயிராமின் இசைவட்டுகளும் வாங்கி அழகாக லெதர் சூட்கேசில் எடுத்து வைத்தாள். சாருவிடமிருந்து ஃபோன்....'நீயும் அப்பாவோட வந்திருக்கலாமே அம்மா!....உன்னை ரொம்பவும் 'மி' பண்றேம்மா'....சாரு நெகிழ்ச்சியோடு சொன்ன போது, ஜானகியின் கண்களில் குற்றால அருவி பொங்கிற்று. டெல்லியிலிருந்து மூர்த்தி வந்தாயிற்று. 'இந்தா ஜானா!...சாரு என்னமோ கொடுத்து விட்ருக்கா பாரு'....அவர் நீட்டிய பையில் அவளுக்குப் பிடித்த பெரிய சை சீத்தாப் பழங்களும், மயில்கழுத்துக் கலரில் வல்கலம் புடவையும்...வெளேரென்று ஒரு மார்பிள் பிள்ளையாரும் .......கூடவே 'என்னோட வீட் அம்மாவுக்கு' என்று முத்து முத்தாக எழுதிய கடிதமும் இருந்தன. 'அம்மா! என்னோட வீட் அம்மா! உன்னை, முக்யமா உன்னோட அறுவையை, இடைவிடாத தொணதொணப்பை, நான் ரொம்பவே மி பண்றேன். அப்பா சொன்னார்....கல்யாணத்துக்கு அப்புறமும் நீ, என்னைப் பத்திக் கவலைப்படறதை நிறுத்தலைனு. ஏன்மா?...அம்மா....ஐயாம் ரியலி லக்கி....சம்பத் ஈ அ ஜம் ஆஃப் அ பெர்சன்....எனது இன்-லாஸும் அவ்வளவு அருமையாகப் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.. என்னோட குட்ஃப்ரெண்ட் யார் தெரியுமா.....தாத்தாவும் பாட்டியும் தான்.... ஒவ்வொருவருக்கும் ஒருவித டேட் இருக்கு...ரசனை இருக்கு. யாரும் எதையும் பிறர்மீது திணிப்பதில்லை....அதனால் அவரவர்களின் தனித்துவத்தை இழக்காமல், ரொம்பவும் இயல்பா இருக்க முடிகிறது. சமையல் செய்யத் தெரியாது என்று சொன்ன போது, மனசுக்குள் முதல் தடவையா பயமும்...கூடவே உனது முகமும் எட்டிப் பார்த்தன. ஆனால் பாட்டி என்னைத் தட்டிக் கொடுத்தபடி.....'சாரும்மா, சமையல் என்ன பிரம்ம வித்தையா? அஞ்சும் மூணும் எட்டானால் அறியாப் பொண்ணும் கறி சமைப்பாள் தெரியுமா? ரெண்டு நாள், அப்புறம் ரெண்டு வாரம்னு சும்மா இப்படி சமயக்கட்டுக்கு வந்து கூடவே இருந்து பாரு... விளையாட்டுப் போல கவனி! அப்புறம் பாரு.....தன்னால உனக்கும் இன்ட்ரட் வந்து, நீயும் தூள் கிளப்புவாய்' என்றார். தட்' ட்ரூ! ஒரு அதட்டல் இல்ல...அதிகரம் இல்ல...இப்பொ வாரத்தில ரெண்டு நாட்கள் என்னோட சமயல்தான்.... ...தாத்தாவோட தினமும் வாக் போகும்போது, நமது சாத்திரங்களையும் சம்ப்ரதாயங்களையும் ரொம்ப அழகாச் சொல்லிண்டே வருவார். அம்மா? உனக்குத் தோன்றலாம்...இப்போ மட்டும் எனக்கு எப்படி திடீர்னு ஆர்வம் வந்ததுனு? அம்மா, ஒன்றை யோஜித்துப்பார்...என்மீது உனக்கு என்றாவது நம்பிக்கை வந்திருக்கிறதா? உனக்கு நான் பரம எதிரியாகத்தான் தெரிந்தேன். நான் எது செய்ய விரும்பினாலும் உடனே உன்னிடமிருந்து ஆட்சேபம்தான் கிளம்பும். அதுவும் அந்தப்பெண் ஆல்பர்ட்டைத் திருமணம் செய்து கொண்டாள் என்று நான் சொன்ன நாளிலிருந்து...........நீதான் எப்படி எல்லாம் தவித்துப் போனாய்?.... என்மீது இருந்த நம்பிக்கை போய், சந்தேகமும் பயமும், உனக்குள் புகுந்து கொண்டதை நானும் உணர்ந்து கொண்டேன். நான் தவறி விடுவேனோ, தப்பு செய்து விடுவேனோ என்ற அச்சம் உன்னை வாட்டி என்னிடமிருந்து தள்ளி வைத்த போதுதான், அப்பா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்து.....என்னைப் புரிந்து கொண்டவராக வழி நடத்தினார். .....அம்மா! நானும் ஒரு பெண்தான்....நீயும் ஒரு பெண்தான். ஒரே மண்ணில் செய்த இரண்டு வித்தியாசமான பொருட்களைப் போலத்தான்.. கொதித்துக் கொதித்துப் பண்டத்தைச் சிதறவிடாத பானை தான் நீ என்றால், மணமும் வண்ணமும் கொண்ட மலர்களைத் தாங்கிய பூஜாடிதான் நான்! ட்ரைவிங் கற்றுக் கொள்ள விரும்பிய போது, நாமென்ன ராயல் ஃபாமிலியா என்று கேட்டாய்? அம்மா, இங்கு சம்பத்தை கம்பெனியில் ட்ராப் செய்து, பிக்கப் செய்து.....எனது மாமியாரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, தாத்தா பாட்டியை டாக்டரிடம் கூட்டிச் சென்று....இந்த வேலையெல்லாம் நான்தான் செய்கிறேன் தெரியுமா? இன்னொரு குட்ந்யூ. ஃபிரெஞ்ச் தூதரகத்தில் எனக்கு வேலை கிடைச்சிருக்கு....இப்போதைக்கு இங்குள்ள சுற்று வட்டாரக் குழந்தைகளுக்குப் பாட்டும், வயலினும் சனி. ஞாயிறூகளில் சொல்லித்தரேன்.... ....அம்மா, இனிமேலாவது, என்னைப் பற்றிக் கவலைப் படாதே. நீ வாழ்வில் தவறு செய்யாத போது, கெட்ட பெயர் வாங்காத போது, உன்னோட பெண்...நான் மட்டும் விதி விலக்கா என்ன? பாட்டி சொன்ன மாதிரி, அஞ்சும் மூணும் என்னிக்குமே எட்டுத்தான்! தப்பே வராது........... கடிதத்தைப் படித்து முடித்தபோது, ஜானகியின் மனம் நிரம்பியது போலவே கண்களும் நிரம்பித் தளும்பின. எழுதியவர்: பானுரவி

பானுரவி / Banooravi

சிறுகதைகள்