சிறுகதை

கதம்பமும் மல்லிகையும்

January 2020 · Sirukathaigal.com

அக்கா — கதம்பமலராக மணத்துக்கொண்டிருந்தவள், இப்போது வெள்ளைப்புடவையில் ஒளிரும் மல்லிகைச்சரமாக. வாசு அத்திம்பேர் இறந்த பிறகும், லாலா ஸ்டோர் வீட்டில் அக்காவின் வாழ்வு.

அக்கா வீட்டுக்குப் போவதென் றால் எனக்கு ரொம் ப இஷ் டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண் டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங் கிருந்து கிளம் பிக் கீழே இறங் கி, மாணிக்க விநாயகர் கோவில் வழியாக வெளிவந்து இடப்புறம் திரும் பிச் சின் னக்கடைத் தெருவில் நுழைந்தால்.. நெடுகச் சுவர் முழுவதும் கலர்கலராய் ச் சினிமாப் போஸ் டர்கள் ஒட்டப்பட்டு, 'ட' வடிவத்தில் மடங் கி நீ ண் டு செல் வதுதான் லாலாகடைச்சந்து. கீழ்த்தளம், மேல் தளம் தவிர இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த அந்த லாலா ஸ் டோரில் ஏறத்தாழ அறுபது, எழுபது குடித்தனங் கள் இருந்தன. தமிழ், தெலுங் கு, மராட்டி, கன் னடம் என்று ஒரு குட்டி பாரதவிலாஸ் அங் கே கலகலக்கும். அக்காவின் வீடு கீழ்த்தளம் முடியும் இடத்தில் இருந்தது. மேல் மாடிக்குப் போவோர் எல் லோருமே அக்காவின் வீட்டைத் தாண் டித்தான் போகணும் என் பதால், அங் கிருந்த அனைவருக்கும் அக்காவிடம் நல் ல பரிச்சயம் இருந்தது. அக்காவிடம் இந்தி கற்றுக்கொள்ளவும், சந்தேகங் களை நிவர்த்தி செய் து கொள்ளவும் வாரத்தில் இருநாட்கள் அங்கு செல் வது எனக்கு வாடிக்கையானது. அக்கா இந்தியில் வித்வான் பட்டம் வாங்கியிருந்தாள். கதை சொல் லும் பாணியோடும், கவிதை நயத்துடனும் குரலை ஏற்றி இறக்கி அக்கா சொல் லித்தரும் போது, மனது பாடத்தில் இயல் பாக லயித்துவிடும்! அக்கா ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டாள். தையல் வேலை. க்ரோஷா போடுவது, ஒயர்ப் பை பின் னுவது, ஸ் வெட்டர் போடுவது என்று ஒன்று மாற்றி ஒன்று செய் துகொண் டே இருப்பாள். அந்தக் குடியிருப்பில் யாரும் தடுக்கி விழுந்தால், முதலில் போய் நிற்பது அக்காவாகத்தான் இருக்கும்! தங் கம் மாமிக்கு வயது அறுபதுக்கும் மேலாகிறது. ஆனால் இன் னமும் மைசூர்ப்பாக்கு செய் யப் பாகு பதம் பார்க்கவும், புளிக்காய் ச்சல் நெடி அடிக்காமல் வந்திருக்கா என்று பார்க்கவும் கூப்பிடுவது அக்காவைத்தான்! அய் யங் கார் மாமியின் பித்தவெடிப்பிற்கு முந்திரி எண் ணை பண்ணிக்கொடுப்பது அக்காதான்! மேல் வீட்டுச் செட்டியார் வீட்டு ஆச்சிக்கு மாவடு போட்டுத் தருவதும், மல் லிகைப்பூ சீசனில் ஸ் டோர் பெண் களுக்குப் பூ வைத்துத் தைத்துவிடுவதும், யாரும் பெரியவளாகி விட்டால், புட்டும், சிகிலி உருண் டை பண்ணித் தருவதும் நிச்சயம் அக்காவாகத் தானிருக்கும். அவ் வளவு ஏன்? யாருக்காவது பிரசவ வலி எடுத்தால், எத்தனை அனுபவசாலியானாலும் கூப்பிடுவது அக்காவைத்தான்! "அச்சோ கடவுளே! இது பொய் வலி மாமி! இதோ போய் ஒரு நொடிலே சீரகக் கஷாயம் கொண்டுவரேன். சூட்டுவலினா அடங் கிடும். இன் னும் வயிறு தழையணும். ஒரு பத்து நாளாவது ஆகும். கவலைப் படாதீங் கோ" என்று அபயக்குரல் தரும் அக்காவைப் பார்த்து அவர்கள் அமைதியாவார்கள். இப்படி சகக் குடித்தனக்காரர்கள் என்றில் லை, அந்த லாலா ஸ் டோருக்கே காவல் தெய் வம் மாதிரி இருந்துகொண்டு (இளவட்டங் களைத் தேடி யார் வந்தாலும் கண் களில் விரலை விட்டு ஆட்டிப்பார்த்து) எல் லோர் வீடுகளிலும் வேலை செய் து வந்த தைலம் மா கிழவிக்குப் பிடிக்குமென் று வேலை மெனக்கெட்டு ஸ் பெஷல் ரவாதோசை பண்ணிப் போடுவதும் அக்காதான்! மார்கழி மாத பஜனையாகட்டும், ராதா கல்யாணமாகட்டும், அங் கிருந்த ஃபங் ஷன் ஹாலில் பெரியதாக மாக்கோலம் போட்டு அசத்துவதோடு மட்டுமல் லாமல், அத்தனை பேருக்கும் நெய் வழியச் சர்க்கரைப் பொங் கல் பண்ணி எடுத்து வருவதும் அக்காதான்! அக்கா இப்படி அக்கம் பக்கத்தில் அனுசரணையாக இருந்தாலும், யாராவது வாயைக் கொடுத்து மாட்டிக்கொண் டால், அவ் வளவுதான். அவர்களை உண் டு இல் லை என்று பண்ணிவிடுவாள். அக்கா எங்கள் வீட்டுக்கு வந்தாலே வீடு திமிலோகப்படும். துள்ளலும், துடிப்புமாக அக்காவின் குரல் எட்டு ஊருக்குக் கேட்கும். அம்மா அப்பாவிலிருந்து குட்டித் தம் பிவரை அவளது சுவாதீனம் கலந்த ஆளுமையைப் பார்க்க முடியும். பாட்டி, தாத்தாவின் திவசம் வந்தால் அம்மாவுக்கு ஒத்தாசையாக அக்கா வந்துவிடுவாள். தேங் காய் சேர்க்காமல், மிளகும் பயத்தம் பருப்பும் சேர்த்துச் செய் யும் அந்தச் சமையலிலும் அக்காவின் சிரத்தையும் கைமணமும் தெரியும். தீபாவளி வந்தால் அவ் வளவுதான். "அம்மா, நெய் யைக் கொட்டி நீ ஏதும் ஸ் வீட் பண் ணாதே! நம் மாத்துக்கும் சேர்த்து நான் மைசூர்ப்பா பண்ணிக் கொண்டுவரேன். மிக்ஸர், ரிப்பன் பக்கோடாவும் நானே பண்ணிடறேன் " என் பாள். வீடு கட்டும் செங் கல் லில் மூன் றில் ஒரு பங் காக இருக்கும் அந்த மைசூர்ப்பா. வாயில் போட்டால் நெய் மணக்கக் கரைந்து போகும்! மிக்ஸரில், தினுசு தினுசான ஐட்டங் கள் இருக்கும். முந்திரி, பிஸ் தா, சிறுகடலை, டயமண் ட் பிஸ் கட், சீரக மிட்டாய், பசேலென் று நெய் யில் வறுத்துப் போட்ட கறிவேப்பிலை என்று பார்க்கவே படு ரம் யமாக இருக்கும்! அக்கா வந்ததுமே எல் லோருக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். "ஏய் சுகு, சாவி, சுபா, இந்து... உங் க எல் லோருடைய தீபாவளிப் புடவையையும் கொண்டு வாங் கோ..ஒவ் வொண் ணும் எனக்கு எப்படி இருக்குன் னு ஒரு நிமிஷம் சுத்திண் டு பார்க்கறேன் " என் பாள். சொன் னபடியே மளமளவென் று, எல் லாப் புடவைகளையும் கட்டிக்கொண்டு, அந்த ரேழியில் இருக்கும் பாட்டி காலத்து ரசம் போன ஆளுயரக் கண் ணாடியில் முன் னேயும், பின் னேயும் பார்த்துக்கொண் டே எங்கள் அத்தனை பேரிடமும் அபிப்ராயம் கேட்பாள். அக்காவுக்குத் தலைமுடி வெகுநீ ளம். காதின் இருபுறமும் ஹேர்பின் குத்தி லூசாகப் பின் னிக் கொள்ளுவாள். தலை நிறையத் தொங் கத் தொங் கப் பூ வைத்துக் கொள்ளணும். கனகாம் பரமும், டிசம் பர்ப்பூவும் வீட்டிலேயே பூத்துக் குலுங் கியதால், அக்காவுக்கென் று சற்று அதிகமாகவே தொடுத்து அனுப்புவாள் அம்மா. அத்தனை பூக்கள் இருந்தாலும், மல் லி, ஜாதிப் பூக்களை விட நெருக்கிக் கட்டிய கதம் பமே அக்காவுக்குப் பிடித்ததாக இருந்தது. 'இந்த மல் லிப்பூவைப் பந்தாட்டம் தலைலே வச்சிண் டா, ஈரத்தலையிலே வெள்ளைத் துண் டைக் கட்டிண் டாப்பல இருக்கும் " என் பாள். அதனாலேயே பூக்காரப் பாப்பாத்தியிடம் சொல் லித் தஞ்சாவூர் ஸ் பெஷல் கதம் பம் தொடுக்கச் சொல் லுவாள். அடுக்குமல் லி, வெட்டிவேர், சம் பங் கி, பட்டுரோஜா, சம் பகப்பூ, வாடாமல் லி, கனகாம் பரம், மரிக்கொழுந்து என்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட அந்தக்கதம் பம் எட்டு ஊருக்கு மணக்கும். மொத்தத்தில் அதிக ஆசாபாசங் களும், பரோபகார குணமும், அதிகாரம் செய் தே அன் பைக் காட்டும் விசித்திரக் குணங் களும், பலவிதக் கெட்டிக்காரத் தனங் களும், அலாதியான தைரியமும், மிகுந்த சுறுசுறுப்பும் கொண் ட அழகான ராட்சசியாகத் தெரிந்த அக்கா, என்னையும் வெகுவாகப் பாதித்து ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்.. அக்காவோடு இருக்கும் சமயங் களில் அவளைக் கவனிப்பதில் எனக்கு சுவாரஸ் யம் ஏற்பட்டது என்றே சொல் லவேண் டும்! மொத்தத்தில் எல் லா அர்த்தங் களும் பொதிந்த ஒரு அகராதியைப் போலவே அக்காவை நான் உணர்ந்தேன்! அக்கா இப்படி என்றால், வாசு அத்திம் பேர் பற்றிக் கேட்கவே வேண் டாம். ஜாடிக்கேற்ற மூடிதான். "மாமா, கல்யாணி ஸ் டோர்ஸில் அருமையான பொன் னி வச்சிருந்தான். ஒரு அஞ்சு கிலோ போடச் சொன் னேன் " என்று வாங்கி வருவார். "வரவழிலே ஆண் டார்தெரு முனைலே பச்ச மணத்தக்காளியும் பிஞ்சுக்கத்திரிக்காயும் வச்சிருந்தான். மணத்தக்காளிலே ரெண் டு கல் லுப்புப் போட்டு ஒரு பச்ச மொளகாய நறுக்கிப் போட்டு அதுல கொஞ்சம் எலுமிச்சம் பழத்தப் புழிஞ்சு விட்டா. ம் ம் ம்... எப்பேர்பட்ட அன் னத்வேஷமும் ஓடிப் போய் டாதா! அத்தனையும் கோல் டு தெரியுமா. அதான் வாங்கிண் டு வந்தேன் " என் பார். இன் னிக்கு வெங் கிடா லாட்ஜுல தூள் பஜ்ஜி பண்ணிருந்தான். குழந்தைகளுக்குப் புடிக்குமேன் னு வாங்கிண் டு வந்தேன். அத்தோட பொறுக்கு வடுவா கிளிமூக்கு மாங் கா கிடச்சுது. உங் க அம்மாட்ட கொண்டுபோய் க் கொடு" என் பார். அத்திம் பேருக்குப் பழைய புத்தகக் கடைக்காரன் பழக்கம் என் பதால் எல் லா ஆங் கிலப் பத்திரிக்கைகளும், காமிக்ஸ் புத்தகங் களும் எனக்கும் என் அண் ணாவுக்கும் வாங்கி வருவார். "இங் கிலீஷ் நாலட்ஜ் நெறைய வேணும். சத்தம் போட்டு தினமும் 'ஹிண் டு' படியுங் கோ. அப்போத்தான் உச்சரிப்பு தெளிவா இருக்கும். ஒரு கிளாரிடியோட பேசமுடியும் " என் பார். அத்திம் பேரின் குரலே சங் கீதமாக இருக்கும். அவர் குளிக்கும் போது பாடும் ப்ரோவபாரமாவும், வாசுதேவயனியும் தேனில் நனைந்துவரும்! அக்காவும் அத்திம் பேரும் காச்சுமூச்சென் று சண் டை போட்டுக்கொள்ளும் நாட்களில் இந்தச் சங் கீதம் தான் அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவரும்! அப்படி ஒன்றும் இருவரும் எலியும் பூனையும் கிடையாது. சமயத்தில் வீட்டில் இருப்பது இல் லாதது தெரியாமல் அத்திம் பேர் யாரையாவது அழைத்து வந்துவிட்டாலோ, அக்காவிடம் ஆலோசிக்காமல் தங் கை கிருபாவுக்குப் பணம் அனுப்பி வைத்தாலோ அக்காவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்! அத்திம் பேர் படு சமர்த்தர். எதேச்சையாகப் பாடுவது மாதிரி மெல் லிசுக்குரலில் "ஆசை கொண் டேன் வண் டே, உன் னுடன் நான் ஈசன் புகழ் பாடவே" என்று ஓரக்கண் ணால் பார்த்துக்கொண் டே ஆரம் பிப்பார், அவ் வளவுதான். அக்காவின் வெடித்துக் கொண் டிருந்த முகத்தில் செம் மை பூக்கும்! பின் னே? அந்தப் பாட்டைத்தானே அவர் அக்காவைப் பெண் பார்க்க வந்தபோது பாடினது! அத்திம் பேர் கறிகாய் வாங் கும் விதமே படு சுவாரஸ் யமாக இருக்கும். கையில் மஞ்சள்பையோடு சின் னக்கடைத் தெருவுக்கு வந்துவிட்டால் அத்தனை ரோட்டோரக் கடைக்காரர்களும் நமஸ் காரம் பண் ணாத குறையாக "வாங் க, வாங் க! நம் ப கடையிலே வாங் குங் க" என்று வரவேற்பதும், வெள்ளைச் சிரிப்போடு இன் முகம் காட்டுவதும், ரசிக்கத் தக்கதாக இருக்கும்! காவிப்பல் தெரியச் சிரித்தபடி, அத்திம் பேர் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு நடைபழகி, யார்யாரிடம் புதியதாக, பிஞ்சாகக் கறிகாய் இருக்கிறதென் று பார்த்துவிட்டு வருவார். கடைக்காரரின் மனம் கோணாமல் பேசி கறிவேப்பிலை, கொத்தமல் லி கொசுறு சகிதம் மஞ்சப்பை நிறைய அள்ளிக்கொண்டு வருவார். அக்காவும் அத்திம் பேரும் மலைக்கோட்டையிலிருந்த பசுமடத்துப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார்கள். காலை எட்டரைக்கெல் லாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம் பினால், மதியம் ஒரு மணிக்கு வந்துவிடுவார்கள். அக்காவின் கைமணம் தெரிந்து, கூடவே ஹெட்மாஸ் டர் ராஜகோபாலன் சாரும் வந்துவிடுவார். அந்தச் சமயத்தில் அக்காவைப் பார்க்கணுமே! ஏதோ நாலு கை இருப்பது மாதிரிப் பறந்து பறந்து ஏதேனும் டிபன் ரெடி செய் வாள். நெய் மணக்கும் ரவா கிச்சடியும், தகடுதகடாய் ஆனியன் ரவாவும் மோர்மிளகாய் மினுக்கும் மோர்க்கூழும். அடேயப்பா! நான் பிரமித்துப் போவேன்! மாலை ஆறு மணிக்கு ட்யூஷன் சொல் லிக்கொள்ள வரும் குழந்தைகள் ஏழரைவரை இருப்பார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு, காலையில் பண்ணியதில் மிச்சம் இருப்பதைப் பொறுத்து இரவு சமையலையும் முடித்துவிடுவாள் அக்கா. அக்கா பெண் சுகந்தாக்குட்டியும் படு துறுதுறு. எட்டு வயசுக்குப் பாவாடையை வழித்துக் கட்டிக்கொண்டு, அக்கா மாதிரியே ரெட்டை இழை கோலம் போடுவதும், ஸ் வரத்தொடு கீர்த்தனை பாடுவதும், கணீரென் று சுலோகம் சொல் லுவதுமாகப் படு சமர்த்து! சாமிநாதன், சுகந்தாவைவிட நாலு வயசு சின் னவன். இவர்கள் இருவருடனும் எனக்கு நன்றாகப் பொழுது போய் விடும். சமயம் கிடைக்கும் போதெல் லாம் நான் படு குஷாலாக அக்கா வீட்டுக்குக் கிளம் பிவிடுவேன். இப்படியாக நெய் க்குத் தொன் னை ஆதாரமா, இல் லை தொன் னைக்கு நெய் ஆதாரமா என்று சொல் லத் தெரியாமல் அக்காவோடு அனைவருமே ஐக்கியப்பட்டுக் கிடந்தோம். அன் றைய தினம் போகிப்பண் டிகை. அக்காவிற்கு அசெளகர்யமான நாளானதால் அத்திம் பேர் மட்டுமே சாப்பிட வந்திருந்தார். பால் பாயசம், தேங் காய் ப்போளி, ஆமவடை, கறி, சாம் பார் என்று அம்மா விதவிதமாகச் சமைத்திருந்தார். அத்திம் பேரின் இலையில் முதலில் பரிமாறியதெல் லாம் அப்படியே இருந்தது. உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண் டிருந்த அப்பாதான் "என்ன மாப்பிள்ளை! கொறிக்கிறீர்! சரியாகச் சாப்பிடாமல் எல் லாம் வைத்தது வைத்தபடி இருக்கு? எல் லாம் உமக்குப் புடிச்ச ஐட்டங் களாச்சே, சாப்பிடுங் கோ" என்றார். "ஊம் " என்று சுரத்தில் லாமல் சொன் னதோடு உடனே எழுந்து, கைகளைக் கழுவியபோதுதான் அண் ணாவுக்குப் பொறி தட்டியது. "என்ன அத்திம் பேர். உடம் பு சரியில் லையா? ஏதேனும் அஜீரணக் கோளாறா? மாத்திரை தரட்டுமா?" என்றான். அண் ணா பெரியகடை வீதியில் பிரபலமாக இருந்த டாக்டர் சூரியிடம் மெடிக்கல் அசிஸ் டண் ட். உடம் பைப் பொறுத்த வரையில் அவன் சொல் வதுதான் வேதவாக்கு. சோர்ந்து போயிருந்த அத்திம் பேர் மெதுவாக அண் ணாவைக் கூப்பிட்டுத் தனக்குச் சில நாட்களாகப் பசி எடுப்பதில் லை என்றும், உணவு செரிமானம் ஆவதில் லை என்றும், முக்கியமாகச் சிறுநீ ர் கழிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் சொன் னபோது அத்தனை பேரும் ரொம் பவே பதறிப்போனோம். அடுத்த நிமிடமே அவரை டாக்டர் சூரியிடம் அழைத்துச் சென் றார் அப்பா. டாக்டர் சூரி எங்கள் அத்தனை பேரிடமும் மிகுந்த வாத்சல் யத்துடன் பழகுவார். அத்திம் பேரின் உடலைப் பரிசோதித்தவர், "என்ன மாமா? இப்போ லாஸ் ட் மினிட்ல அழைச்சுண் டு வந்திருக்கேள்! உங் க மாப்பிள்ளைக்கு ரொம் ப நாளா இந்தப் பிரச்னை இருந்திருக்கு. எதனாலோ சங் கோஜப்பட்டுண் டு சொல் லாம இருந்திருக்கார். பரிசோதனைல இது 'ஹிமொடோரியா'னு தெரியறது. சிறுநீ ர்ல நெறையச் சிகப்பு அணுக்கள் கலந்திருக்கு. சரியான ரத்த ஓட்டம் இல் லாததால ரெண் டு கிட்னியும் பழுதடஞ்சு போய் டுத்து. கிட்னிலே கல் சேர்ந்துண் டு சிஸ் டமே சரியாய் வேலை செய் யலை. உங் ககிட்ட நான் உண் மை நிலவரத்தைச் சொல் லணும். என்னை மன் னிச்சிடுங் கோ. இன் னும் அதிகபட்சமா உங்கள் மாப்பிள்ளை ரெண் டு வாரம் இருப்பாராங் கிறது கூடச் சந்தேகம் தான்!" அப்பா நிலை குலைந்து போனார். வார்த்தைகள் குழறிக் குழறி அரற்றினார். "ஐயோ! டாக்டர்! இதென் ன இப்படி ஒரு குண் டைத் தூக்கிப் போடறேள். எத்தனை செலவானாலும் பரவால் ல. எப்படியானும் அவரைக் காப்பாத்திடுங் கோ." "இதோ பாருங் கோ மாமா. உங் களைச் சமாதானப்படுத்தவோ, தைர்யப்படுத்தவோ, இல் லாத ஒன்றைக் கூற நான் பிரியப்படலை. உங் களுக்கு மிஸ் டர் வாசுவின் நிலைமை, கையை விட்டுப் போயாச்சு என் பது தெரியணும்! எக்ஸ் ட்ரீம் லி ஸாரி. இனி ஆக வேண் டியதைப் பாருங் கள். யாருக்கும் சொல் லி அனுப்பணும் என்றால் அதைச் செய் யுங் கள் " என்றபோது துக்கமும் அதிர்ச்சியும் சேர்ந்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. டாக்டர் சொல் லி இருந்த 'அந்த' இரண்டு வாரக் கெடுவைத் தவிர, அத்திம் பேருக்கு வந்திருக்கும் பிரச்சனையையும் அவரைத் தீவிர மருத்துவ சிகிச்சைக்குத் தயார்படுத்த வேண் டிய அவசியத்தையும் அக்காவிடம் சொன் னபோது, அக்கா உருண் டு புரண் டு கதறித் தீர்த்து விட்டாள். ஊரிலிருந்த அத்தனை தெய் வங் களையும் அம்மா வேண் டிக் கொண் டாள். வேறு மருத்துவர்களும் டாக்டர் சூரியின் கருத்தையே பிரதிபலித்ததால், அடுத்த கட்ட நடவடிக்கையாக எதைச் செய் வதென் று தெரியாமல் அப்பாவும் தவித்தார். மறுதினம் அக்கா அரக்கப் பறக்க வந்தாள். "அப்பா..எங்கள் லாலாஸ் டோரில் ஒரு மாமி மதுரைல இருக்கிற எஸ் கின் ஹாஸ் பிடலில் கிட்னி மாற்றுச் சிகிச்சை செய் து குணப்படுத்துவதாகச் சொன் னா..என்ன..கொஞ்சம் பணம் ஜாஸ் தியாச் செலவாகுமாம். அவருக்கு இல் லாத பணம் எதுக்குப்பா? நாம் ப உடனே மதுரைக்குப் போலாம் பா" என்றபோது, அப்பாவும் அந்த நாட்கெடுவைச் சொல் லமுடியாமல் சரி என்று சொல் லிக் கிளம் ப ஆயத்தம் செய் தார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அம்மா, அண் ணா, அப்பாவுடன் அக்காவும் அத்திம் பேரும் ஒரு கார் ஏற்பாடு செய் துகொண்டு மதுரைக்குக் கிளம் பினார்கள். ஆனால் விதி யாரை விட்டது? மதுரையில் அந்த மருத்துவ மனைக்குள் நுழையும் முன் பே இரண்டு முறை விக்கல் எடுத்த அத்திம் பேர், நிலைகுத்திய கண் களோடு மூச்சுவிட மறந்து போனார். அழுதழுது சிவந்த கண் களும், வீங் கிய முகமுமாக அக்காவும் மற்றவர்களும் வந்த போது, லாலாஸ் டோர் குடித்தனக்கரார்கள் மட்டுமின் றி, பள்ளிக்கூட மாணவர்களும், வாத்தியார்களும், கடைத்தெரு மனிதர்களும் சூழ்ந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சிரிப்பும், பேச்சும், சகாயமும், சங் கீதமுமாக வளைய வந்த அத்திம் பேர் தனது ஐம் பத்து ஒன் றாம் வயதில் இப்படி அக்காவை நிராதரவாக விட்டுபோனது, யாராலும் ஜீரணிக்க முடியாத நிஜமாகிப் போனது! "அப்பா. பேசுப்பா! கண் ண முழிச்சுப் பாருப்பா. பாட்டு சொல் லிக் கொடுப்பா. "என்ற சுகந்தா மற்றும் சாமிநாதன் கதறலும், "என்னை விட்டுட்டுப் போய் ட்டேளே! எனக்குச் சமையல விட்டா ஒண் ணுமே தெரியாதே. இந்த ரெண் டையும் நான் எப்படிக் கரை சேர்க்கப் போறேன் " என்று அடித்துக்கொண்டு அக்கா அழுததும் எங் களை நிலைகுலையச் செய் தது! அதன் பிறகு யாருக்கும் நிற்காமல் பதின் மூன்று நாட்கள் எல் லாக் காரியமும் மளமளவென் று நடந்தேறின. இனி அக்கா என்ன பண் ணுவாள்? நண் டும் சிண் டுமான இந்த இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு? எல் லோர் மனத்திலும் இந்தக் கேள்வியே விஸ் வரூபம் எடுத்துக் கொண் டிருந்தது! கிராமத்திலிருந்த அப்பாவை, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து குடும் பத்தை முன் னுக்குக் கொண்டு வருவதற்காகவும், திருச்சிக்கு வரவழைத்ததே அக்காவும் அத்திம் பேரும் தான்! மாப்பிள்ளை என்ற ஹோதா இல் லாமல், எல் லா விதத்திலும் அனுகூலமாக இருந்து வந்த அத்திம் பேரைத் தான் பெறாத பிள்ளை என்று அப்பா சொல் லிக்கொள்வார். எல் லோருக்கும் பிடிக்கும் விதத்தில் நடந்துகொண்டு, எல் லோரிடமும் ஒரேவிதமாக நல் ல பெயரெடுப்பது என் பது அப்படியொன் றும் எளிதல் ல. ஆனால் அந்த மாதிரி ஒரு நல் லபெயரெடுக்க அத்திம் பேரால் முடிந்தது! வந்திருந்த பெரியவர்களுக்குள் விவாதங் களும், கூடிக்கூடிப் பேசுவதும் நடந்து கொண் டிருந்தது! கரூர் சித்தப்பாவும், பிரான் மலை அத்தையும், நங் கவரம் பெரியம் மாவும், தொண் டிப் பெரியப்பாவும் அப்பாவோடும் அம்மாவோடும் சீரியசாகப் பேசிக்கொண் டிருந்தனர். "தோ பாரு லலிதா! கொஞ்ச நாளைக்கு வேணும் னா குழந்தைகளையும் உன் பெண் ணையும் வீட்டோட வச்சுக்கலாமே ஒழிய. அப்படியே தங் க விடப்படாது. இதுனால மத்த பெண் களுக்குக் கல்யாணம் பண் றதுல ஆயிரத்தெட்டு இடஞ்சல் வந்து சேரும் " என்று பெரியம் மா சொல் லி நிறுத்தியபோது, தாங் கமுடியாத ஆத்திரம் வந்தது! இந்தப் பெரியம் மாவுக்குத்தான், ஆறு மாசம் முன் னால் கேடராக்ட் ஆபரேஷன் செய் து தன் னோடு கொஞ்சநாள் வைத்துக்கொண்டு கவனித்து அனுப்பி இருந்தாள் அக்கா. நன் றிகெட்ட மனுஷி என்று அப்பாவுக்கும் கோபம் வந்திருக்க வேண் டும்! "இதோ பாருங் கள். உங்கள் யாரையும் நான் எந்த அபிப்ராயத்தையும் கேட்கல..என் பொண் ணுக்கு நாங் க.என்ன செய் யணும் என் பது எனக்குத் தெரியும். எல் லோரும் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம் " என்று சொன் னதும், சொந்தக்காரக் கும் பல் நகர்ந்தது. அம்மாவோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தவராக, அக்காவைக் கூட்டிக் கொண்டு வரும் படி அப்பா சொன் னார். கதவைத் தட்டி அக்காவைக் கூப்பிட்டபோதுதான். அக்காவின் தோற்றம் மனதில் அறைந்தது. தலை நிறையப் பூவும், ரெட்டை மூக்குத்தியும், ஜிலீரென் று தகதகக்கும் திலகமும் இட்டுக்கொண்டு வண் ணநிலாவாக உலா வந்த அக்கா காது, கழுத்தில் ஒன்றுமில் லாமல் வெற்று நெற்றியுடன். வெள்ளைப் புடவையுடன் வந்தபோது, அத்தனைபேரும் கத்தித் தீர்த்துவிட்டோம். "அக்கா! இதென் ன கோலம்? காலம் மாறிடுத்துக்கா! முன் ன மாதிரி இல் ல. இந்த வெள்ளைப் புடவைய அவிழ்த்து எறி. நெத்திலே சின் னதா ஒரு பொட்டு இட்டுக்கோ. கழுத்திலே ஒரு மெலிசு சங் கிலி போட்டுக்கோ. இப்படி உன் னைப் பார்க்கவே படு கண் றாவியா இருக்குக்கா" என்று எல் லோரும் கத்தித் தீர்த்தோம். "ஐயோ! இதென் னம் மா வெள்ளையைக் கட்டிண் டு..நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கே" என்று அம்மாவும் அப்பாவும் ஒருசேரக் குரலெடுத்து அழுதார்கள். அக்கா மெலிதாகப் பேசினாள். "என்னோட அலங் காரங் களும், ஆசைகளும் அவருக்குச் சிதை மூட்டினதுமே எரிஞ்சு போயிடுத்து. காலம் என்னிக்குமே மாறுவதில் லை, நாம் தான் நமது செளகர்யத்துக்கு ஏத்தாப்போல மாறிண் டு காலம் மாறிடுத்துன் னு சொல் லிக்கிறோம். ராத்திரி, பகல், சொந்தம், பந்தம் இப்படி எதிலும் மாற்றங் கள் வருவதில் லை. சம் பிரதாயங் களை மிஞ்சி, மனசுன் னு எல் லோருக்கும் ஒண் ணு இருக்கு. மனசுங் கிறது நம் ப எல் லோருக்கும் நீ தி பரிபாலனம் நடக்கும் ராஜாங் கம் மாதிரி. நமது குற்றம், குறை, நிறை, திருப்தி, அதிருப்தி, நியாயம், அநியாயம் என்று அத்தனை உணர்வுகளும் பொங் கிப் பிரவாகிக்கும் மனசை மிஞ்சிய எதுவும் உலகில் பெரியது இல் லை. அனைவருக்கும் மனசுதான் காவலாக இருக்கமுடியுமே தவிர மதில் காவலாக இருப்பதில் லை; மனச்சாட்சிக்கு விரோதமில் லாமல் நடப்பவனே மனிதனாகிறான். மனது ஸ் படிகம் போல வெள்ளையாக இருந்தாலே அது சிந்தையிலும் வெளிப்படுமே! வெள்ளைக்கில் லை கள்ளச்சிந்தை என் பார்களே! எனவே இனி எனது இந்தத் தோற்றம் பற்றி யாரும் எதுவும் பேசாதீர்கள் " என்றபோது, அனைவரின் கண் களிலும் கங் கை பொங் கிற்று. அப்பாதான் தாங் க முடியாமல் பேசினார். "அம்மாடி குழந்தே! இது பெரிய துயரம் அம்மா. இனி நீ தைர்யமா இருக்கணும். உன் னிடம் சுமைகளைத் தந்துட்டு அவர் இப்படி நீ ட்டி நிமிர்ந்து கண் காணாமப் போய் ட்டாரே! உன் னைக் கடவுள் இப்படித் தண் டித்து விட்டாரே! நம் வீட்டுக்கு வந்துடு. நாங் கல் லாம் உனக்குப் பக்கபலமா இருப்போம். கவலைப்படாமல் கிளம் பும் மா" என்று குலுங் கிக் குலுங் கி அழுதபடி அப்பா சொன் னபோது, அக்கா இடைமறித்தாள். "அப்பா. உங் க வார்த்தைகள் எனக்கு ஆறுதலா இருக்குப்பா. என்னோட குழந்தைகள் எனக்குச் சுமை என்றால், திருமணமாகி எல் லாச் சுகங் களையும் அனுபவித்து, இப்போ துக்கப்பட்டு நிற்கும் நான் நம் வீட்டுக்கு வருவது மட்டும் உங் களுக்குச் சுமை இல் லையா? பிரச்னை என்றால் உடனே பிறந்தவீடு வருவதும் எனது சுமைகளை மற்றவரிடம் திணிப்பதும் என்ன நியாயம்? ஒரு வார்த்தைக்குச் சுமை என்று வைத்துக் கொண் டாலும், அவரும் நானும் அன் பாகவும், ஆசையாகவும் சேர்ந்து ஏற்றிக்கொண் ட இன் பச் சுமையல் லவா இந்த இரண்டு குழந்தைகளும்? அவரில் லாமல் இனி குடும் பத்தைக் கொண்டு செலுத்துவது, மீகாமன் இல் லாத மரக்கலம் போலத்தான்! ஆனாலும், அவரில் லாத குறை தெரியாதபடிக்கு இந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதுதான், அவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரக்கூடியதாக இருக்கும்! அவரது அன் பும் நினைவும் என்னுள் எப்போதும் நீ ங் காமல் இருந்து என்னை வழி நடத்தும். அதற்கு நான் அணிந்து கொண் டிருக்கும் வெள்ளைப் புடைவையே ஒரு கவசமாகவும் இருக்கும் அப்பா!" அக்கா சொல் லி நிறுத்தியபோது அங் கே கனத்த மெளனம் நிலவியது. இரண்டு குழந்தைகளையும் அரவணைத்தபடிச் சொன் னபோது பலவித வண் ணங் களில், பல் வேறு மணங் களில் கதம் பமலராக மணத்துக் கொண் டிருந்த அக்கா, வெள்ளைப் புடவையில் ஒளிரும் மல் லிகைச் சரமாக என்னுள் புத்துருக் கொண் டாள்!

பானுரவி / Banooravi

சிறுகதைகள்