சிறுகதை

துளசி

October 2021 · Thendral Tamil Magazine · October 2021

கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் ஒரு கிட்டி பார்ட்டி நினைவுகளின் வாசலாய் திறக்கிறது. மேகலா — இருபத்து மூன்று வருஷம் அமெரிக்காவில் வாழ்ந்தவள் — தனது மகள் துளசியை தீபக்கிற்குக் கல்யாணம் செய்துவைத்து, கொரோனா காலத்தின் கொடுமையில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறாள். பின் ஒரு நீண்ட வாட்ஸ்அப் துளசியிடம் இருந்தே வருகிறது: பட்டங்கள் ஒரே ஆகாயத்தில் பறந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தனி உயரத்தில் பறக்கிறது, விதை மண்ணில் வேர்பிடித்து வியாபிப்பதற்காகவே இருக்கிறது என்று. அமைதியாக ஒளிரும் ஒரு தாய்-மகள் கதை.

துளசி டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரிசெய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி பார்ட்டி. வருபவர்கள் அனைவரும் பெண்கள் என்பதால், அவள் கணவன் அருணும் தனது நண்பர்களோடு டென்னிஸ் விளையாடப் போய்விட்டான். கச்சோரி, மட்டர்பனீர், அவல் கேசரி, பட்டன் இட்லி, புதினா சட்னி, தயிர்வடை என்று எல்லா ஐட்டங்களும் அணிவகுத்திருந்தன. கூடவே ஐஸ் மிதக்கும் எலுமிச்சை நன்னாரி சர்பத்தும் உலர்பழக் கலவை ஃப்ரூட் சாலடும்" துளசியின் திருமணத்திற்குப் பிறகு முதன்முதலாக எல்லோரையும் பார்ப்பதால், அழகிய டெரகோட்டா விநாயகரையும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க கிஃப்ட்ராப் செய்துவைத்தாயிற்று" கொரோனா வந்து உலகத்தையே ஆட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போதுதான் நிலைமை கொஞ்சம் பரவாயில்லைஎன்ற நிலையில், இந்தக் கிட்டி பார்ட்டிக்குஏற்பாடுசெய்திருந்தாள் மேகலா. துளசியின் திருமணம், அதையொட்டிய இந்தியப் பயணம் என்று முடிந்தபோது, கொரோனாவின் தீவிரம் தொடங் கிய காலம். யாரும் யாரையும் பார்க்க முடியாமல், எல்லாவிதக் கேளிக்கையும் கொண்டாட்டமும், தடைப்பட்டுப் போனதில் ஒருவிதத் தொய் வுஏற்பட்டு, எல்லோரையும் முடக்கிப் போட்டுவிட்டது. இன்னமும் நிலைமை சீராகவில்லைதான். இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று பயமுறுத்துகிறதேஎன்று அனைவரும் கவசம் அணிந்தும், தொலைவை அதிகப்படுத்தியும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். அத்தோடுஇந்தியாசென் றுதுளசியைப் போய்ப் பார்த்துவரக்கூட முடியாத பயணத் தடைகள்" இதுஇன்னும் எத்தனைநாளுக்கோ. கனத்துப்போன மனம் பெருமூச்செரிந்தது. துளசியைக் கல்யாணம் செய்துகொடுத்துவிட்டுவந்ததோடுசரி. தினம் ஜூம் காலும்.வாட்சப்புமாகப் போய்க் கொண்டிருக்கு. கலிஃபோர்னியாவில், மவுண்டன் வியூவுக்குவந்ததிலிருந்து, இந்தக் கிட்டிபார்ட்டிபதினைந்தில் ஆரம்பித்து, இப்போதுஇருபத்தைந்தில் வந்துநிற்கிறது" ஒவ்வொருமாதமும் இரண்டாம் சனிக்கிழமையன் றுயாரேனும் ஒருவர் வீட்டில் இப்படிக் கூடுவதுவழக்கமாகிப் போனது. உதவிக்கரம் நீட்டவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தக் கிட்டிபார்ட்டிஅனுகூலமாக இருந்தாலும், அவ் வப்போதுநாட்டுநடப்பும், ஊர்வம் பும், இன்னபிற சமாச்சாரங் களைஅளக்கும் வம் புமடமாகவும் இருந்ததுஎன்பதைமறுப்பதற் கில் லை. அதிலும், கல் பனாவும், காயத்ரியும் பேசும் விஷயங்கள் எல்லாமேகையும் காலும் முளைத்த கதையாகத் தானிருக்கும். இரண்டைநாலாக்கி, நாலைஎட்டாக்கிப் பேசுவதில் படுசமர்த்தர்கள். நாடுவிட்டுநாடுவந்து, இப்படிவாழும் போதுநண்பர்கள் மிகவும் அத்யாவசியமென் றுநன்றாக உணர்ந்தபடியால் மேகலாவும், தனதுஇயல் புக்குமாறான இந்தப் பெண் களுடன் சிநேகமாக இருந்துவந்தாள். நினைத்தும் பார்க்கவில் லை; மவுண்டன் வியூவுக்குவந்து இருபத்துமூன்று வருஷம் விளையாட்டுப் போல் ஓடிவிட்டது. எல்லாம் நேற்று நடந்தாற்போல் இருக்கிறது. மேகலாவின் மனப்பறவைசிறகடித்துப் பறந்த நினைவுகளைஅசைபோட்டது. ★★★★★ டிகிரிவாங் கின கையோடு தட்டச்சும், குறுக்கெழுத்தும் பாஸ் பண்ணிஒரு நல்ல கம்பெனியில் வேலைகிடைத்துப் போய்க் கொண்டிருந்த நாட்கள் நிழலாடின. அவளதுபிறந்த ஊர் ஒருகிராமமாகப் போய்விட்ட படியால், மேல் தட்டுமக்களின் ஆடம் பரமும் நாகரிகப் போக்கும் இன் றைய காலம் போல் தொழில் நுட்ப சாதனங் களும் புகுந்துகலப்படம் செய்யாத அழகிய நாட்கள் அவை. கிராமத்து அத்தியாயங் கள்" பஸ்ஸில் வேலைக்குச் சென் ற காலகட்டம். மேகலாவேலைசெய்துவந்த கம்பெனிக்கு ஆடிட் செய்ய வந்த அருணுக்கு அவளைநிரம்பவேபிடித்துப்போனது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், பதவிசாக அவள் பணியாற்றிய விதமும், பளீரென் ற புன் னகையுடன் பழகிய விதமும் அவனைஅவள் பால் ஈர்த்தது. சற்றேஅறியாத்தனமும், கொஞ்சம் அப்பவித்தனமும் மிகுந்து காணப்பட்ட மேகலாவைத், தனது தேவைக்குஏற்றாற்போலவும், தனதுகுடும்பம், முக்கியமாகத் தனதுதாயாருக்குத் தகுந்தாற்போல் தயார்ப்படுத்தவும், ரொம் பவேமெனக்கெடணும் என்று அவனதுஉள்மனதுஎச்சரித்தாலும், ஆசை யாரைவிட்டது? மேகலாவிடம் தனதுவிருப்பத்தைஅருண் கண்ணியமாகச்சொன்னபோது, தனதுசம் மதத்தைமெளனத்தால் உணர்த்திய மேகலாவின் கன் னங் கள், அவனது அந்த எதிர்பாராத கேள்வியால் சற்றே சிவந்தன. நெஞ்சம் படபடத்துநெற்றியில் முத்து முத்தாக வியர்வை பூத்தது. அவளுக்கும் அவனதுஅணுகுமுறை பிடித்திருந்தது. அருண் தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவன் எதிர்பார்த்தபடியேஅத்தனைவரவேற்பில் லை. "தோபாருஅருண்" நீசொல் ற பொண்ணுக்கு, உனக்குச் சமமான உயர்படிப்புஇல்ல; கண்ணுக்கு லட்சணமாஇருந்தாமட்டும் போறாது. ஒருவரனைப் பார்க்கும் போது, அந்தஸ் து, இங்கிதம், சங்கீதம், அப்புறம் சரியான குடும் பப் பின் னணிஎன்றுஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. கல்யாணங் கிறதுஆயிரங் காலத்துப் பயிரு.இப்படிக் கண்டதேகாட்சிகொண்டதேகோலம் னுசட்சட்டுனுநடத்திட முடியாது. நம்பளோட ஸ் திதிக்குஏத்தமாதிரிபொண்ணுஇருந்தாக்க சொல்லும் படிசீனுவாத்யாரண் ட சொல்லிவச்சிருக்கேன். கொஞ்சம் பொறுமையாஇரு" என்றாள் கற்பகம். அம்மாவின் வார்த்தைகளுக்குஅருண் படிந்தானில் லை."அம்மா" ப்ளீஸ். எனக்குப் பிடிச்சவளோடதான் என்னோட வாழ்க்கைஅம்மா" உன்னோட வார்த்தைகளைநான் என்னிக்கும் மதிக்கிறேன்.ஆனால் வார்த்தைளால் வரும் கட்டுப்பாட்டைக் கட்டாயமாக மறுக்கிறேன். அம்மா, நான் ஒன்றும் அறியாத பையனல் ல. எனதுதேர்வுசரியானதுஎன்பதைநீஒருநாள் தெரிந்துகொள்வாய்"" என்றுஅழுத்தம் திருத்தமாகப் பேசிக் கற்பகத்தைஅழைத்துக்கொண்டு, மேகலாவைப் பெண் பார்க்க வந்தான். அருணின் தாயார் கற்பகத்துக்குப் பூர்வீகம் தஞ்சாவூர்ப் பக்கமென் பதால், சங்கீதம் அவள் குடும்பத்தில் ஊறிப் போயிருந்தது. இருபெண் களுக்கும் வீணையும், வாய் ப்பாட்டும் முறையாகச்சொல்லிவைத்திருந்தாள். ஒவ் வோர் ஆண் டும் திருவையாறுதியாகராஜ ஆராதனையில் அந்தப் பெண்கள் தவறாமல் பங் கேற்றுப் பாடுவதில் அலாதிப் பெருமைவேறு. கற்பத்தின் தந்தைமிருதங் கம் வாசிப்பதில் தேர்ந்தவர் என்பதால், நல்ல வித்வான் களின் அறிமுகமும், சபாக்களின் அங்கீகாரமும் அந்தக் குடும்பத்திற்குப் பல காலமாகவேகிடைத்திருந்தது" இப்படிப் பேச்சும் மூச்சும் சங்கீதமாகவேஇருந்த பட்சத்தில், கற்பகத்தைப் பொறுத்த மட்டில் சங்கீதம் தெரியாதவர்களெல் லாம், அற்பப் பிறவிகளாகத்தான் தெரிந்தார்கள்" மேகலாசற்றேநடுங்கித்தான் போனாள். மேகலாவின் அம்மாதான் அவளைச் சமாதானம் செய்தாள். "மேகலா.எல்லாம் போகப் போகச் சரியாய்விடும். உன்னோட பொறுமையும் நிதானமும் சமர்த்தும் எதுக்கும் ஈடாகாதுங் கிறதைநாளடைவுல புரிஞ்சுப்பா. குடும்பத்தைநடத்தறதுக்குஎன்னத்துக்குப் பாட்டும் கூத்தும்? சுவாமிவிளக்கேற்றி, தினமும் ரெண்டுஸ் லோகம் சொன்னாலேலட்சுமிகடாட்சம் வந்துடுமே" தைரியமாஇரு. இந்தமட்டுக்கும், அருண் உங்கிட்ட எத்தனைபிரியமாஇருக்கார் பாரு.உன்னைஎந்தவொருசந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கவேமாட்டார். கவலைப்படாதே"" என்றுசொல்லி, பொன் வைக்கும் இடத்தில் பூவைவைத்துத் திருமணத்தையேமுடித்துவிட்டாள். சங்கீதம் தெரியாததுஒன்றும் தகுதிக்குறைவுஇல்லையே? ஆனாலும் அருணின் அம்மாகற்பகத்துக்குஅதுபெரிய மனக்குறையாகவேபட்டது" சங்கீதம் தெரியாததுஒருபக்கம் இருந்தாலும், தனதுபேச்சைமீறிப் பிள்ளைதன் இஷ் டப்படிஇப்படிமேகலாவைக் கல்யாணம் செய்துகொண்டதுதான் அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாகவும், தாங்க முடியாத வலியாகவும் ஆகிப்போனது. அதனாலேயேஅவளதுவார்த்தைகளில் உஷ் ணமும், உக்கிரமும் கொப்புளித்தன. எந்தவொருஉணர்ச்சியும் இதுவரையில் காட்டாமல் தானுண் டு, தன் வேலையுண் டுஎன்றிருந்த மேகலாவின் வாயைக் கிண் டுவதில் ஒருஅல் ப சந்தோஷம் ஏற்பட்டதுகற்பகத்துக்கு. "அதெப்படிஒருகல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு, நல்லதாஒருபாட்டுசொல்லித் தரணும் னுஉன் வீட்டில யாருக்கும் தோணல? நம்மோட குடும்பங் கள்ல பாட்டுங் கிறது, எல்லாச் சடங் கிலும், சம்ப்ரதாயங் களிலும் கலந்துதானேஇருக்கு? தாலாட்ட ஒருபாட்டு, பூஜைக்குஒருபாட்டு, பஜனைக்கொருபாட்டு, ஆரத்திக்குஒருபாட்டு. ஏன், இறந்துபோய் ட்டாஇழவுக்குக்கூடப் பாட்டுன் னுவகைக்கொருதினுசுல பாட்டுஇருக்கே. ஹூம்" நல்ல குடும்பம் போ"" என்றுஒருநாள் கற்பகம் அலுப்பும் எரிச்சலுமாகச்சொன்னபோதுஆற்றாமையால் மேகலாவுக்குமனசெல் லாம் வலித்தது. கொஞ்சம் ரோஷமும் பொத்துக்கொண்டுவரவே"இங்க பாருங் கோ.எங்க ஊருகிராமாந்தரம். பாட்டுசொல்லித் தர்றவானுயாரும் இல்ல. பக்கத்துடவுனுக்குப் போய் த்தான் கத்துக்கணும். அதுக்குஎனக்குநேரமும் இல்ல. அத்தோட இன்ட்ரஸ் டும் இல்ல. கஷ் டப்படற அம்மாவுக்குஒத்தாசையாஇருக்கணும் னுதான் தோணித்து. அதுசரி" நீங்க ஏன் அருணுக்குப் பாட்டுசொல்லித் தரலை? அவர் சமயங் களில் முணுமுணுத்துப் பாடும் போது, நல்ல குரலாஇருக்கேனுநினைச்சுப்பேன்." அவ் வளவுதான்" இப்படிமேகலாஎதார்த்தமாகச்சொன்னதும் பொங் கிஎழுந்துவிட்டாள் கற்பகம்."ரொம் ப நன் னாஇருக்கேநீபேசறது? புருஷாளுக்குஎன்னத்துக்குப் பாட்டு? பொம் மனாட்டிக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். சும் மாபுளியைக் கரைச்சுக், கூட்டும் குழம் பும் பண்ணினாமட்டும் போறாது. வேலைல சலிச்சுப் போய் வீடுதிரும் பற புருஷாளைஉற்சாகப்படுத்தப் பொம் மனாட்டிக்குத்தான் பாட்டு, வாத்தியம் னுதெரியணும்" கழுதைக்குத் தெரியுமாகற்பூர வாசனை? உன் கிட்டப் போயிசங்கீதத்தைப் பத்திப் பேசறேனே" நன் னாக் கேட்டேபோஒருகேள்வி"" சூறைக் காற்றைப் போலக் கற்பகத்தின் கோபம் வார்த்தைகளைச் சிதறடித்தது. நம்மைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் நம்மீதுகாட்டும் வெறுப்பும் கோபமும் நம்மைப் பாதிப்பதுஇயற்கைதானே" ஏன் இப்படி? குடும்பம் என்கிற அளவில், பெண்கள் மீதான அதிகாரமும் ஆளுமையும் குறையவேஇல்லையே. பெண் ணுக்குப் பெண் ணேஎதிரியோ?. சொற்களுக்குவாசமில் லை; எடைகூட இல்லை.ஆனாலும் கத்தியைவிடவும் கூரான முனைஉள்ளதே? அதுயார் மனத்தையும் குத்திக் கிழித்துரணப்படுத்தும் தானே? ஒவ்வொருவரும், தன் னளவில் வன் முறையைக் காட்டுவதற்குத்தான் பெரும் பாலும் வார்த்தைகளைப் பிரயோகிக்கிறார்களோஎன்றுமேகலாவுக்குத் தோன் றியது" எத்தனைவலிகள்" இந்த வலிக்குஎங்குபோய் நிவாரணம் தேடுவது? காலம் காலமாக மனிதமனம், பிறரைச் சொல்லால் வதைப்பதைஒருகலையாகவேபயின் றுவந்திருக்கிறதோ? ஒருவர்மீதுகாட்டும் கோபமும், வெறுப்பும், உறவின் வண்ண ஜாலங் கள் ஓர் அழகிய ஓவியமாக உருவாகும் முன் பேஅழிக்கப்பட்டுவிடுகிறதே. பிடிக்காத மனதுக்குஇயல் பிலேயேநாளாவட்டத்தில், சுற்றம், வீடு, சூழல், மனிதர்கள் என்றுஎதுவொன் றும் பிடிக்காமல் போய்விடுகிறதே. இயலாமையும், ஆற்றாமையும் தான் ஒருவருக்குஏற்படும் கோபத்தின் ஊற்றுக்காலோ?. மெளனமானாள் மேகலா. பேச்சைக் கற்றுக்கொள்வதைப் போல அத்தனைஎளிதாக அவளால் மெளனத்தைக் கற்றுக்கொள்ள முடியவில் லை. ஆனாலும், வாசனையால் பூக்கள் தம் மைவெளிக்காட்டிக் கொள்வதுபோல, சொற்களில் லாத மெளனத்தால் தன்னைவெளிக்காட்ட முயன் றுகொண்டிருந்தாள். எதற்கும் காலம் விடைசொல்லும் என்றுகாத்திருந்தாள். பொறுமையாஇருஎன்றுஅம்மாஅடிக்கடிசொன்னதுமனதுள் வந்துபோனது. அந்த நாளும் வந்தது. அருணின் கம்பெனிவிரிவாக்கம் கண்டுஅவனுடன் அமெரிக்காபோகச்சந்தர்ப்பம் கிடைத்தபோதுமனசுஆனந்தக் கூத்தாடியது."விடுதலை, விடுதலை, விடுதலை" என்றுகூச்சலிட வேண்டும் போலிருந்தது. அமெரிக்காவின் பிரம் மாண் டமும், சுதந்திரமான அணுகுமுறையும், வெளிப்படையான வாழ்க்கைமுறையும், அவளைநிரம்பவேகவர்ந்தன. புத்துணர்ச்சியுடன் புதுரத்தம் பாய் ச்சியதுபோலிருந்தது. கடந்த காலத்தின் நிழல் விழாமல் குடும்பத்தைக் கொண்டுசெல் ல மன உறுதியோடுஇருந்தாள். ஊரும் வேண் டாம், உறவும் வேண் டாமென் றுதனதுஒரேபெண் துளசியைஅமெரிக்க நாகரீகத்துடனேயேவளர்த்தாள். நடை, உடை, பாவனை, பேச்சு, நட்புவட்டம், உணவுப் பழக்கம் என்று, துளசிஇன் றைய அமெரிக்கப் பெண்ணாகத் துடிப்புடன் இருந்தாலும், பக்தியும், பாட்டும், சாத்வீக குணமும் இயல் பாகவேஅவளிடம் படிந்துகிடந்தன. யாரையும் எளிதில் கவர்ந்துவிடும் வசீகரம் துளசியிடம் நிறையவேஇருந்தது. தன் னம் பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட பெண்ணாக இருந்ததோடு, எந்தப் பிரச்னையையும் கொஞ்சமும் பதட்டமில் லாமல், அறிவார்த்தமான அணுகுமுறையில் சரியாக்கும் பக்குவமும் துளசிக்குஇருந்தது. கலிஃபோர்னியாதமிழ்க்கூடம் அமைப்பின் பிரசிடென் ட்டாக அருண் இருந்தபடியால், இந்தியாவில் இருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்துஅமெரிக்காவந்துசெல் லும் பேச்சாளர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரிடம் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. பிரம் மாண் டமான அருணின் வீட்டில் அவர்கள் தங் கியதோடுமட்டுமின் றி, மேகலாசெய்யும் வற்றல் குழம் பு, அடைஅவியலுக்கும் அடிமையாகிப் போனார்கள். இப்படித்தான் துளசியின் சங்கீதமும் விட்டகுறைதொட்ட குறையாக, அங்குவந்துபோகும் வித்வான் களின் மூலம் வளர்ந்தது. சரளிவரிசை, வர்ணம் என்றுஆரம்பித்து, மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளையும், தனிப் பாடல் களையும் அப்பழுக்கில் லாமல் பாட ஆரம்பித்திருந்தாள் துளசி. பாவூர் கண்ணன் என்ற பிரபல பாடகர் துளசிக்குஆன் லைனிலேயேபயிற்சிஅளித்துவந்தார். துளசியின் குரல் இந்த முறையான பயிற்சியால், தேனாக இனித்தது. நாளுக்குநாள் மெருகேறியது. "அருண் சார், மேகலாமேடம்" நம்ப துளசிஇங்க இருக்க வேண்டிய பொண் ணேஇல்ல போங் கோ" இந்தியாவந்தாக்க நிச்சயமாகொடிகட்டிப் பறப்பாள். ஸ் ருதியும் லயமும் அப்படியேஇழைஞ்சுவரது. அதோட அவளுக்குக் குரலில் க்ளாரிட்டியும் டிக்‌ஷனும் சூப்பராஇருக்கு" என்றுசிலாகித்துச் சொன்னார். அடுத்தமுறைஅமெரிக்க விஜயத்தின் போதுஅவர் சற்றுஅழுத்தமாகவேசொன்னார்."தோபாருங் கோ" பாம் பேஷண் முகானந்தாசபையிலேஒருசீனியர் வித்வானின் பட்டமளிப்புவிழாவுக்குநம்ப பிரதமர் வரப்போறார். எனக்குஅங்க நல்ல தொடர்புஇருக்கிறதால நம்ப துளசியைஅங்க பாட வச்சாஒரு நல்ல ஆரம்பமாஇருக்கும். நல்ல சந்தர்ப்பம். தவறவிடாம தக்க வச்சுக்கறதுஉங் க கையில் தான் இருக்கு" என்றுசொல்லிநிறுத்தியபோது, சில் லென் ற ஐஸ் கட்டியைவிழுங் கினாற்போல் இருந்ததுமேகலாவுக்கு" அருணுக்குஉற்சாகம் கரைபுரண் டது."ஒ" நிச்சயமா. உங்களுக்குஎப்படிநன்றிசொல் றதுனேதெரியல. ஷ் யூர். நம்ப துளசிக்குஇதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது. குருகடாட்சம் தான்" கட்டாயம் நாங்கள் பாம் பேவரச் சம் மதம்"" என்றுபூரிப்போடுகூறினான். மேகலாவும் சிலிர்த்துப் போயிருந்தாள். துளசிக்கும் ஒரேஎக்சைட்மென் ட். ஒருநாட்டின் பிரதமருக்குமுன் பாகப் பாடுவதுஎன்பதுஎத்தனைபெரிய விஷயம் ? மாஸ் டர்ஸ் முடித்துஅப்போதுதான் ஒருபிரபல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த படியால், சரியாகப் பத்துநாட்களுக்குவிடுப்புஎடுத்துக்கொண்டுஇந்தியாசெல் ல ஆயத்தம் செய்தார்கள். துளசியைஊக்கப்படுத்திய சங்கீதப் பெருமக்களுக்கும் குருவான பாவூர் கண்ணனுக்கும், மற்றுமுள்ள சிநேகிதர்களுக்கும் என்றுசில பரிசுப்பொருட்களைவங் கிக்கொண்டாள் மேகலா. செம் பூரிலிருந்த சித்திபெண் சியாமளாவைக் கூப்பிட்டுஇந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டபோது,"ஒ" ரொம் ப நல்ல விஷயம் மேகலா" நானும் கிருஷ் ணனும் வேணுங் கிற ஹெல் ப் பண்ணத் தயாராஇருக்கோம்."பெரீமா, பெரீப்பா"னுநாங்க அமெரிக்க வந்தபோது, எங்ககிட்ட எத்தனைஒட்டுதலாஇருந்தாதுளசிக்குட்டி" இப்போபிரதமர் முன்னேகச்சேரிபண் ற அளவுக்குவந்தாச்சா? கிரேட்"" என்றுஉற்சாகமாகப் பேசினாள். அவள் கணவர் தொழில் ரீதியாக அடிக்கடிஅமெரிக்காவந்துசெல் பவர். எனவேஅவர்களுக்குள் நிரம்பவேஅன் னியோன் னியம் இருந்தது. உற்சாகமாக மேகலாவும், கிருஷ் ணனும் துளசியோடுஇந்தியாகிளம் பினார்கள். பாம் பேஷண் முகானந்தாஹாலில் எள்ளுப் போட்டால் எண்ணைவிழும் அளவுக்குக் கூட்டம். அதுவும் பிரதமரின் வருகைஎன்பதால், மலர்மேடைகளும் விளக்குஅலங் காரங் களும் அழகிய இருக்கைகளும் ஒருவித சோபிதத்தைக் கொடுத்திருந்தன. மயில் கழுத்துநிறப் பட்டுப்புடவையும் வைர நெக்லசும் குண் டுஜிமிக்கியுமாக இருந்த துளசி, அனைவரின் கண் களுக்கும் ஒருஅழகிய தேவதையாகவேதெரிந்தாள். வரவேற்புரைக்குப் பின்னர், சீனியர் வித்வானைப் பாராட்டிப் பட்டமளிப்புநிகழ்ந்த பின்னர், துளசிபாட ஆரம்பித்தாள். சம்ப்ரதாயப் பாடல் களும், மீராபஜனும் பாடியபோதுஅவையில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. முத்தாய் ப்பாக"எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவிஇருந்ததும் இந்நாடே" அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்துசிறந்ததும் இந்நாடே" இதைவந்தனைகூறிமனதிலிருத்திவாழ்த்திவணங் கேனோ. இதைவந்தேமாதரம் வந்தேமாதரம் என்றுவணங் கேனோ"" என்றுபாரதியின் பாடலைப் பாடிநிறுத்தியபோது, சபையோர் அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீரில் நனைந்திருந்தனர். கைதட்டல் அடங் க வெகுநேரமானது. துளசியைத் தட்டிக் கொடுத்துப் பொன் னாடைபோர்த்தி, உயர்ந்த பதக்கமொன் றையும் அணிவித்துப் பிரதமர் பேசலானார். "துளசிஎன்பது, நமதுபாரதத்தின் பாரம் பரிய, புனிதமான, அனைவராலும் வணங் கத்தக்க ஒருசெடி" துளசியின் ஒவ்வொருஇலையும் நறுமணம் என்பதுபோல், இந்தப் பெண் துளசியின் ஒவ்வொருபாடலும் இவ் விடத்தில் நம்மிடையே, பக்திமணத்தையும், நாட்டுப் பற்றையும் ஒருமித்துஉண் டாக்கியதுஎன்பதைமறுப்பதிற் கில் லை" முதல் இலையிலிருந்துகடைசிஇலைவரையில் மாறாத மணம் கொண்ட துளசிவேறு, இந்தப் பெண் வேறுஇல்லை. இந்தப் பெண் துளசிஅமெரிக்காவில் பிறந்துவளர்ந்திருந்த போதிலும், தனதுவேர்கள் இந்த பாரதத்தில் ஊன் றப்பட்டதைஉணர்ந்து, மிக அருமையாகப் பாடிக் காட்டியதிலிருந்துநாம் தெரிந்துகொண்டோம்" இவரைப் போன் ற இளைஞர்களும், யுவதிகளும் உள்ளவரையில் நமதுதேசத்தின் கலாச்சாரமும், பண் பாடும் மென் மேலும் தழைத்தோங் கும் என் பதில் எள்ளளவும் சந்தேகமில் லை" துளசிஎல்லாவற்றிலும் சிறந்துவிளங் கிப் புகழோடும், பெயரோடும் விளங் க வாழ்த்துகிறேன்" வாழ்க பாரதம்"" பாராட்டுமழையில் அருணும் மேகலாவும் அப்படியேநனைந்துபோயிருந்தனர். எங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். சியாமளாவும், கிருஷ் ணனும் மனதாரப் பாராட்டினர்."துளசி" யூஆர் எ பிளெஸ் டுகேர்ல்"" என்றபோதுமேகலாவுக்குவார்த்தைகள் வராமல் தொண் டையில் சிக்கிக் கொண்டன. தன் னால் முடியாத ஒன்றைத் தனதுபெண் சாதித்துக் காட்டியபோது, மனதுவிம் மியது. துளசிக்குள் இத்தனைதிறமையா? என்றுவியந்துபோயிருந்தாள்" துளசியைக் கட்டிக் கொண்டபோதுஅந்த இறுக்கத்தில் நெகிழ்ச்சிதெரிந்தது. சியாமளாவிடமும் கிருஷ் ணனிடமும் விடைபெற்றுமுன் பேபுக் செய்துவைத்திருந்த ஹோட்டலுக்குத் திரும் பினார்கள். மறுநாள் இரவுஅமெரிக்கப் பயணம் என்பதால், ஏர்போர்ட்டுக்குமிக அருகிலேயேஇருந்த அந்தப் பிரபலமான ஹோட்டலுக்குவிரைந்தனர். அதுசமயம் அவர்கள் அனைவருக்குமேஒருஆனந்தமான அமைதிதேவையாக இருந்ததும் ஒருகாரணம்" மறுநாள் காலைஉணவுக்குஅவர்கள் கிளம் பும் சமயம், அவர்களைப் பார்க்க ரிசப்ஷனில் யாரோகாத்திருப்பதாக ரூம் பாய் வந்துசொன்னான். சியாமளாவாகத்தான் இருக்கும் என்றுபோனவர்கள், அங்கேமுன் பின் தெரியாத மூன்றுபேர் இருப்பதைக் கண்ணுற்றதும் கொஞ்சம் குழம் பினர். "ஹலோஅங்கிள்" ஆன் ட்டி" ஐம் தீபக்" ப்ளீஸ் மீட் மைபேரண் ட்ஸ்"" அந்தப் பையன் தீபக் பார்ப்பதற்குக் கண்ணியமாகவும், வசீகரமாகவும் தெரிந்தான். ஒருவிளையாட்டுவீரன் போன் ற தோற்றம். "யெஸ் ப்ளீஸ்" குட் மார்னிங்"" என்றுஅருணும் கைகுலுக்கினான். அந்தப் பையனின் அப்பா, உயர்ந்த சூட், டைகட்டி, அந்தக் காலத்துதர்மேந்திராபோல கம்பீரமாகத் தெரிந்தார். அந்த அம்மாவும், சந்தனநிற மைசூர்சில் க் புடவையில் வைரப்பதக்கம்பதித்த நாலுவடச் சங் கிலியும், ரோலக்ஸ் வாட்சுமாக ஜம் மென் றுஇருந்தாள். அழகாகப் புன் னகைத்தவள் தனதுகையிலிருந்த பூங் கொத்தைமேகலாவிடம் கொடுத்ததுஎதற்கோகட்டியம் கூறுவதுபோல இருந்தது. "ஸாரிடுடிஸ் டர்ப் யூஇன் த மார்னிங். நேத்திக்குஉங் க பெண் ணோட பாட்டுஎங்களைஅப்படியேகட்டிப்போட்டுவிட்டது. எங்களைவிடவும் எங்கள் பிள்ளைதீபக்கிற்குரொம் பப் பிடிச்சுப் போய் டுத்து. பாட்டைமாத்திரம் அல்ல, பாடின பொண் ணையும்" என்றுகண் சிமிட்டியபடிசொன்னபோது, அருணும் மேகலாவும் நிதானத்துக்குவருவதற்குச் சற்றுநேரம் பிடித்தது. அவர்களைஅதிகம் குழப்ப விரும் பாதவராக அவரேபேசலானார்."நாங்கள் தஞ்சாவூர் பக்கம். ஆனாபாம் பேவந்துரொம் ப காலம் ஆச்சு. தெற்கேஅப்பப்ப குலதெய் வம் கோவிலுக்குப் போய் வரதோட சரி. ஆனாலும் பாருங் கோ" நாம எங்கேகுடிபெயர்ந்துபோனாலும், கூடவேநம்மோட ஊரும் ஒருகைப்பிடிஅளவுதங் கிடும் னுசொல்லுவா. பேச்சிலோ, உணவிலோ, செய் கையிலோ, எதிலாவதுஅந்தந்த ஊரின் ஜாடைநிச்சயம் தெரிஞ்சுடும், இல்லையா? நீங்களும் அநேகமாதஞ்சாவூர்க்காராளாகத் தானிருக்க வேண்டும் னுநினைக்கிறேன். ஏன் சொல் றேன் னா, நம்ப துளசிபாட்டிலும் தஞ்சாவூர் பாணிதெரிகிறது. எங்கள் பிள்ளைக்குஉங் க பெண்ணைப் பிடித்துப் போனதால், உங்களைவந்துபார்த்து, இந்தப் பேச்சைஆரம்பித்தேன். தவறாக எண்ணாதீர்கள். துளசிக்காக நீங்கள் ஏற்கனவேஏதேனும் திட்டமிட்டுவைத்திருந்தால், வற்புறுத்தப் போவதில் லை. நல்ல நண்பர்களாகப் பிரிந்துவிடுவோம்". தீபக்கின் தந்தைதாமோதரனின் பேச்சில் உண்மையான விருப்பமும், கண்ணியமும், வெளிப்படையாகத் தெரிந்தன. இதுஎன்ன, விசித்திரமாக அல்லவாஇருக்கிறது? எதுவொன் றும் கைவசமாவதுஎன்பது, அவரவரின் விருப்பத்தையும் முயற்சியையும் ஒட்டித்தானேநடக்கும் ? ஒருபளபளவென் ற பாதரச உருண் டைபோல அல்லவாஇந்த வாழ்க்கை, நமதுகைகளில் அகப்படாமல் மிகவும் வசீகரமாக நம்முன்னேஉருண்டோடிக் கொண்டிருக்கிறது? கண்ணுக்குத் தெரியாத நமதுவாழ்வின் அர்ப்பணிப்புகள், நாம் செய் த புண் ணியங் கள், துளசிக்குஇப்போதுஒருசிம் மாசனத்தைத் தரப்போகிறதா? மாயமந்திரம் போல் அல்லவாஇருக்கிறது?. எப்போதுபெய் யும், எப்போதுநிற்கும் என்பதுஇயற்கையின் பெருங் கொடையாகிய மழைக்குமட்டுமல் ல.வாழ்க்கையின் அரிதான கணங் களுக்கும் கூடப் பொருந்துகிறதே" எதுவொன் றும் சற்றும் எதிர்பாராமல் நடப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஊரின் நிழல் கூடப் படியக்கூடாதுஎன்றுதுளசியைப் பொத்திப் பொத்திவளர்த்தேனோ, அங்கேயேதுளசிவேரூன் றப் போகிறாளா? வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்றுஇருப்பதுதான், அதன் சுவாரஸ் யம் போலும்" மேகலாவுக்குநிஜமாகவேஉடம்பும் உள்ளமும் படபடத்தன. பதில் சொல்லத் திராணியற்றுஅருணைப் பார்த்தாள். அருண் சற்றுக் காலம் வேண்டும் என்றுகேட்டுக்கொண்டுஅவர்களிடமிருந்துவிடைபெற்றான். உடனடியாக சியாமளாவிடம் இவ் விஷயத்தைப் பகிர்ந்துகொண்ட போது, அவள் அக்குடும்பத்தைப் பற்றிவிசாரித்துநல்ல விதமாகவேஅப்டேட் செய்தாள். மிக நல்ல குடும் பமென் றும், ஆசாரமானதென் றும், விருந்தோம் பலும், நாள் கிழமைகளில் பாட்டும் கச்சேரியும் அடிக்கடிநடத்தும் வீடுஎன்றும், சத்சங் கமும், பூஜையும் அடிக்கடிஅங்கேநடைபெறுவதுண் டுஎன்றும் சொல்லிநிறுத்தியபோது, நல்ல சம் பந்தத்தைவிட்டுவிடக்கூடாதுஎன்றுஅருணும், மேகலாவும் நல்ல நாளில் பேச்சைத் தொடங் கித் துளசியின் கல்யாணத்தையேமுடித்தாயிற்று. கண் மூடித் திறப்பதற்குள், இப்படித் துளசியின் திருமணம் நடந்துவிடும் என்றுகனவிலும் எண்ணவில் லை. இசையைத் தவிர எல்லாவற்றிலும் ரொம் பவேஅமெரிக்கத்தனமாக இருக்கும் துளசி, பாரத மண்ணோடுஎப்படிஒத்துப் போகமுடியும் ? அடிக்கடிபிரபலங் கள் வந்துபோகும் வீட்டைஇந்தப் பெண் எப்படிச் சமாளிக்கும் ? பாஸ் தாவும், பீட்சாவும், சாலட்டுமாகச்சாப்பிட்டு, ஜீன் ஸும் டாப்ஸுமாக வளைய வந்துகொண்டிருந்த பெண்ணைச் சரியான இடத்தில் தான் கொடுத்திருக்கோமா? சமயங் களில் வேதனைமிஞ்சிஅருணிடம் அங்கலாய் ப்பாள். திருமணம் ஆன கையோடுகொரோனாவந்துவிட்டதால் எல்லாம் தடைப்பட்டுப் போனதே. இப்போதுயாரும் பயணம் செய்யமுடியாமல் இடையூறுவந்துவிட்டதே? இல்லாவிட்டால் ஒருஎட்டுபோய்ப் பார்த்துவந்துவிடலாமே? இதுதான் பெத்த மனசுஎன் பதா? ★★★★★ டிங் டாங். காலிங் பெல். கடந்த கால நினைவுகளிலிருந்துமீண் டவள், எல்லோரையும் வரவேற்கத் தயாரானாள். பிரியாவைத் தவிர அனைவரும் வந்தாயிற்று. சிரிப்பும் அரட்டையுமாக அந்த இடம் கலகலத்தது. கொரோனா, டெல் டாவைரஸ். அமெரிக்காவின் விசாமுறைகள், சர்வதேச அரசியல் செய்திகள், கமலாஹாரிஸ், தமிழக அரசியல், மோடியின் சீர்திருத்தச் சட்டங் கள், நெட்ஃப்லிக்ஸ் படங் கள், ஜப்பான் ஒலிம் பிக்ஸ், சித் ஸ்ரீராமின் திரைப்பாடல் கள், பரம் பரம் பரமசுந்தரிஎன்றுஒருசுற்றுவந்தார்கள். காயத்ரிஆரம்பித்தாள்."என்ன மேகலா, எப்படிஇருக்காஉன் பொண்ணு? டம் முடம் முனுபூமிஅதிர நடந்துபோவாளே. ஹவ் ஈஸ் ஷீ?" "ரொம் ப நன் னாவேஇருக்கா." "பெரிய குடும் பமாச்சே. பிரச்னையெல் லாம் சமாளிக்க முடியறதா?" இதுகல்யாணி. மேற்கொண்டுதொடர்ந்தாள் கல்யாணி,"இன்னிக்குஏன் ப்ரியாவரலைன் னுதெரியுமோ? அவ பொண்ணுஇஷ் டப்படியேகல்யாணம் பண்ணிவச்சா. ஆனாக்க பொண்ணுக்குச் சமைக்கத் தெரியலை, இங்கிதமாப் பழகத் தெரியலை, மரியாதையாப் பேசத் தெரியலை, சும் மாசீரியலும், சினிமாவும் பார்த்துண் டுபொழுதுபோக்கிறதுன் னுஒரேகம்ப்ளயிண் டாம். கடேசில அந்தப் பொண்ணுக்குஇந்தச் சூழலும், அந்தக் குடும்பத்தின் பழக்கங் களும் சரிப்பட்டுவராமல், இப்போடிவோர்ஸ் வரைக்கும் வந்தாச்சு. அதனால நம்ப ப்ரியாமனசுஉடஞ்சுபோயிஎங்கயும் வரலை." மேகலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. என்ன பெண்கள் இவர்கள் ? பிறரதுவேதனையைஅம் பலமாக்கி, அதில் குளிர் காய் கிறார்களே" ஹூம்" மனசுஒருநிலையில் இல்லை. அவர்களெல் லோரும் எப்போதுகிளம் புவார்கள் என்றுகாத்துக் கிடந்தாள். ஒருவழியாக அவர்கள் சென் றபின், அருண் வந்தவுடன் புலம் பித் தீர்த்தாள். "மேகலா" உலகம் அப்படித்தான் பேசும்" ஊருரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என் பார்கள். டேக் இட் ஈஸி" நம்ப பொண்ணுமேல எனக்குநிறைய நம்பிக்கைஇருக்கு.படுகெட்டிக்காரி. அநாவசியமாகற்பனைபண்ணிக்கொண்டுமனசையும் உடம் பையும் கெடுத்துக்காதே" ஜஸ் ட் ரிலாக்ஸ்"" உண்மையிலேயேதுளசியிடம் அருண் கொண்டிருந்த நம்பிக்கையும் மதிப்பீடும் அத்தனைஉசத்தியாகத்தான் இருந்தது. மேகலாவுக்குஏனோஇருப்புக் கொள்ளவில் லை.சியாமளாவுக்குஃபோன் செய்தாள். ஒருநடைதுளசியைப் போய்ப் பார்த்துவரும் படிகேட்டுக்கொண்டாள். மேகலாவின் குரலில் தெரிந்த கலக்கத்தைஉணர்ந்துகொண்ட சியாமளாஅந்த வார இறுதியில் போய்ப் பார்த்துவருவதாகச்சொன்னாள். சொன்னபடிக்கு, அந்தச் சனிக்கிழமையன் றுசியாமளாவிடமிருந்துபோன்."மேகலா" உனதுபெண் படுசமர்த்து. ரெண்டுநாட்களுக்குமுன் னால அங்கேஒருவிருந்துபசாரம் நடந்திருக்கு.நம்ப துளசிதான் முன் னின் றுஎல்லாவற்றையும் கவனிச்சுண் டுஇருந்திருக்கா. அத்தோட இப்போஇந்தக் கொரோனாஅமர்க்களம் என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றிச் சொல்லியும், பெற்றோரைஇழந்துபாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குஉணவு, உடைகள் அளித்து, பாதுகாப்பாக இருக்க ஓர் இடம் ஏற்படுத்தி, மாலைநேரங் களில் அவர்களுக்குப் பாடங் களும், ஒய் வுநேரத்தில் பாட்டும் சொல்லிக் கொடுக்கிறாளாம். அவர்கள் வீட்டுப் பின்புறம் இருக்கும் விளையாட்டுத் திடலில் ஒருஉடற்பயிற்சிக்கூடம் அமைத்துஅவர்களைத் தினமும் ஒருமணிநேரமாவதுஉடற்பயிற்சிசெய்யும் படிசில ஆட்களைப் பணியில் அமர்த்திஏற்பாடுசெய்திருக்கிறாள். இன்னமும் நிறையத் திட்டங் கள் கைவசம் இருக்காம். சிலம் பம், வில் வித்தை, இவற்றைச் சொல்லித் தரவும் எல்லோரும் பயன் பெறும் படிஒருபொதுநூலகமும் வைக்கப் போறாளாம். உன் சம் பந்தியம் மாவுக்குஒரேபெருமை. நீஅவளைப் பற்றிக் கவலையேபடாதே" அவள் நிச்சயமா"வேற லெவல்." மனப்பாரம் நீங்கியதுபோல் இருந்ததுமேகலாவுக்கு. டங் … துளசியிடமிருந்துதான் வாட்ஸ் அப். நீண் ட தகவலாக இருக்கவேஆசுவாசப்படுத்திக்கொண்டுபடிக்கலானாள். "அம்மா" சியாமளாபெரீமாஇங்க வந்திருந்தார். நீஏன் என்னைப்பத்திஇவ் வளவுகவலைப்படறே? நான் உன்னோட பொண்ணு. உன்னோட வளர்ப்புஇல்லையா? எங்கிருந்துதப்பும் தவறும் வரும், சொல்லு? முதல் ல, தீபக்கிற்குஎன்னைத் திருமணம் செய்துவைத்ததற்குரொம் ப தாங்க்ஸ். என்னோட பார்வையும், உலகமும் இப்போரொம் பவேவிரிஞ்சுகிடக்கு. எந்தவொருசரித்திரமும் இல்லாத, கொலம் பஸ் கண்டுபுடிச்ச புதிய கண்டம் அமெரிக்காலேருந்துகிளம் பிவந்து, பழைய சரித்திரங் களும், வரலாறும் நிறைந்த ஒருபுராதன இந்தியாவைப் பார்க்கும் போது, நான் தெரிந்துகொள்ள எத்தனையோவிஷயங்கள் இருப்பதுதெரிகிறதுஅம்மா. நானும் புதிது; இங்குள்ள மனிதர்களும் புதிது; இடமும் புதிது; இப்படிஎல்லாமேபுதியதுஎன்பதால் எனக்குரொம் பவேஇன்டரஸ் டிங் காஇருக்குமா. எல்லாமேஅனுபவம் கற்றுத்தரும் பாடம் இல்லையா? எனதுவீட்டார் இங்கேஎனக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருப்பதால், எதையும் பயமின் றி, அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடுஅணுக முடிகிறது. அப்பாமாதிரிஎல்லாவற்றையும் டேக் இட் ஈஸிஎன்றுஎடுத்துக் கொள்ளும் போதுமனதில் பாரமும் இல்லை; பயமும் இல்லை" எந்தவிதக் கவலையும் வந்துகூடுகட்டுவதும் இல்லை. அம்மா.அங்கீகாரம் என்பதுஒருஆளுயர மாலையோ, ஒருமலர்க் கிரீடமோஇல்லை. ஒருபுன் சிரிப்பு, ஒருஇதமான வார்த்தை, வாஞ்சையுடன் கூடிய ஒருதோள் தட்டல், அழகான கைகுலுக்கல், ஜஸ் ட் லைக் தட், இப்படிஇருந்தாலேபோதும்.இவையெல் லாம் எனக்குஅன்றாடம், வேண்டிய மட்டும் கிடைக்கின் றன அம்மா" நாம் செய் பவைதானேநமதுவாழ்க்கைக்குஒருஅர்த்தம் ஏற்படுத்துகிறது? நாம் கடந்துசெல் லும் அனுபவங் களைவிடப் பெரிய ஆசான் எதுவாக இருக்கமுடியும் சொல்லு? அம்மா, உனதுஇளவயதுத் துயரங் களைநான் அறிவேன். உனதுஉள்மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். அதனாலேயேஉனதுகேள்விகள் எல்லாம், பதிலைநோக்கியதாக அல்லாமல், பயத்தைஉருவாக்குவதாகவேஉள்ளன. நீபட்ட அடியும், அவமானமும் என்மீதுவிழக்கூடாதுஎன் பதில் நீஎத்தனைகவனமாக இருந்திருக்கிறாய்" யூஆர் கிரேட் அம்மா" அம்மா. ஒன்றுதெரியுமா? ஒருபெண் காற்றேஇல்லாமல் சுவாசிப்பதும், வார்த்தைகளின் றிப் பேசுவதும், கண்கள் இல்லாமல் காட்சிகள் காண் பதுவும், உணர்ச்சிகள் இல்லாமல் கிடப்பதுவும், கனவுகளும் கவலைகளும் இன் றிஉறங் குவதும். ஒருதாயின் கருவறையில் மட்டுமேசாத்தியம் அம்மா" உண்மையில், ஒருபெண் வெளியில் வந்துவிட்டால், பொதுவிடத்திலும், புதுஇடங் களிலும் மனிதர்களிடத்திலும், அவள் பயின் ற அறமும் திறமும், கற்றுத் தெளிந்த பாடமும், தாய் தந்தையரின் வளர்ப்பும் அவளுக்குத் துணையாக நிற்குமேஅம்மா" ஒப்புக் கொள்கிறாயா? பட்டங் கள் ஒரேஆகாயத்தில் பறந்தாலும், ஒவ்வொன் றும் தனித்தனிவிசையும் உயரமும் கொண்டல் லவாபறக்கிறது? நானும் இங்கேஉயரே, உயரேபறக்கிறேன் அம்மா. துளசிஎன்றுபேரிட்டுமிகவும் பத்திரமாக, பவித்திரமாக இந்தப் புண் ணிய பூமியில் என்னைநீஊன் றிவிட்டாய்" எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவிய பாரத நாட்டில் அல்லவாநான் வாழ்கிறேன்" விதைகள் என்றுமே முளைப்பதற்குத்தான் அம்மா.யாரும் உண்டுஜீரணிப்பதற்கல் ல. மண்ணில் வேர் பிடித்து வியாபிப்பதற்குத்தான் அம்மா. துளசியின் புனிதம் கெடாமல், அதன் புகழ் மங்காமல் காய்ந்தாலும் மணக்கும் படியாக வாழ்வேன் அம்மா" கவலைப்படாதே"" கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்ட, டேபிளில் இருந்த துளசியின் புகைப்படத்தை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள் மேகலா" பானுரவி, சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

சிறுகதைகள்