2018
"அந்தஅவள் தான்யாரோ?" என்ற கேள்வியை ஆறு பாடல்களில் திரும்பத் திரும்ப எழுப்பும் ஒரு கவிதை — தாமரை முகம், கயல்விழி, சந்தன மேனி, கார்க்கூந்தல் என்று செந்தமிழ்ப் பண்பாட்டுப் படிமங்களால் படைக்கப்பட்ட உருவம், கடைசியில் பாடகரின் சொந்த கவிதை-தேவதைக்கான வாழ்த்தாக மாறுகிறது — மறுபிறவி எடுத்து, காவியங்கள் எழுதி, செந்தமிழின் கவிமணமாய் விளங்குக என்று.
அந்த அவள்....! கவிமணம் 2018
செந்தா மரைமுகமோ! சிரித்திடும் தேன்மலரோ!
தந்தங்கள் அ(வ)யவமோ! தளிர்மேனி சந்தனமோ!
கண்கள் கயல்மீனே! கடல்நீலம் கொண்டதுவோ!
அந்திவரும் சந்திரஜே! அந்தஅவள் தான்யாரோ?
ஊர்வியக்கும் மோகினியோ! உயர்மாடப் பைங்கிளியோ!
ஊர்ந்துவரும் தேரழகோ! உற்சவத்துத் தேவதையோ!
கார்கூந்தல் கருமுகிலோ! காந்தள்மலர் கைவிரலோ!
வார்த்திட்ட பொற்சீலேயோ! வந்துநின்ற அவள்யாரோ?
என்னுள்ளம் புகுந்தவளோ! இதயத்தைக் கவர்ந்தவளோ!
எந்தனுயிர்க் காதலியாய் இன்பமெலாம் தந்தவளோ!
சொந்தமெனச் சொன்னவளோ! சுகதுக்கம் பகிர்ந்தவளோ!
சிந்தையிலே நிறைந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ?
ஊண்தந்த உத்தமியோ! உயர்ந்தகுணம் கொண்டவளோ!
அன்பென்னும் பெருஞ்சூனேயோ! அரம்பையோ! ஆரணங்கோ!
துன்பங்கள் துடைத்தவளோ! துாயமனம் கொண்டவளோ!
என்னுள்ளே கலந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ?
தந்தைசொல் மந்திரமோ! தமக்கையின் திருமணமோ!
இன்னபிற காரணமோ! ஏனிந்த நாடகமோ!
விதிவழியே சென்றுளோ! விடுதியிலே கிடந்தாளோ!
புதியகதை படைத்தாளோ! அந்தஅவள் தான்யாரோ?
அந்தஅவள் ஈனியாளாய்ப் புதுப்பிறவி எடுக்கட்டும்!
அந்தஅவள் வருகையிலே என்வாழ்வு மலரட்டும்!
அந்தஅவள் அகவிகையமாய்க் காவியங்கள் எழுதட்டும்!
அந்தஅவள் செந்தமிழின் கவிமணமாய் விளங்கட்டும்!
============
பானுமதி வெங்கட்ரமணி
பானுரவி / Banooravi
கவிதைகள் →