கவிதை

தேசிய நாள் விழா

c. 2010s · Tamil Murasu · Singapore

சிங்கம் போல் தமிழினம் சிறந்து வாழ்கவே; தங்கம் போல் தரத்திலே உயர்ந்து வாழ்கவே — சிங்கப்பூர் தேசிய தினத்திற்காக சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளியான நான்கு பந்தி கவிதை.

தேசிய தினவிழா வருகவே நேசமாய்ப் பாடுவோம் தோழரே சிங்கம்போல் தமிழினம் சிறந்து வாழ்கவே தங்கம்போல் தரத்திலே உயர்ந்து வாழ்கவே எங்குமே விளங்கிடும் சீனமலாய் மக்களும் பாங்குடன் பண்புடன் வாழ்கவே உத்தமர் உழைப்பிலே உலகம் போற்றிட நித்தமும் நிலவென வளரும் சிங்கப்பூர் பட்டொளி வீசியே பாரெலாம் புகழவே பரமனை வாழ்த்தியே வணங்குவோம் நன்மையும் செல்வமும் நாளும் பெருகவே இன்பமாய் மக்களும் என்றும் வாழ்கவே திருமகள் கலைமகள் திருவருள் சூட்டவே திருப்புகழ் பாடியே வணங்குவோம்

பானுரவி / Banooravi

கவிதைகள்