கதை 9

வீட்டு மருத்துவம்

சமையற்கட்டுக்கும் முற்றத்துக்கும் இடைப்பட்ட அந்தக் கதவுக்கு அருகே முற்றத்தில் தளதளவென்று வேப்பங்கொழுந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விடிகாலை வேளையில், முற்றத்து அம்மியில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வெழுமூணாக அந்த வேப்பங்கொழுந்தை வைத்து அரைத்து எடுக்கிறார் அம்மா. அரைத்த விழுதைச் சிறு சிறு உருண்டைகளாக அக்கா உருட்டி வைக்கிறாள். உறியிலிருந்து பசுந்தயிர் எடுக்கப்பட்டு ஒரு சின்ன புலா தம்ப்ளரில் வைக்கப்படுகிறது. சின்னத் தட்டில் நாட்டுச் சக்கரையும் கூடவே...

என்ன நடக்கிறது? முரண்பட்டுச் சற்றும் உடன்பாடு இல்லாமல் கொஞ்சம் கடுப்போடு தான் நாம் அங்கே உட்கார்ந்திருப்போம்....வேறு வழியில்லை. கசப்பான அந்த வேப்பிலை கொழுந்து உருண்டையை அம்மா வாயில் போட்டு, உடனே அந்தப் புலா தம்ப்ளர் தயிரையும் வாயில் விடுவாள். கசந்து வழியும்...கூடவே அந்த நாட்டுச் சக்கரையை வாங்கிக் கொண்டு ஓடுவோம்....வயிற்றுப் பூச்சி இருந்தால், அதை அகற்றவும், வயிற்றைச் சுத்தமாக்கவும்தான் இந்தப் போராட்டம் நடக்கும்!

அப்புறம் ஒரு மூன்று மாசத்துக்கு ஒரு தடவை என்ற ரீதியில் விளக்கெண்ணெய் படலம். ஒற்றை ஆரஞ்சு வண்ண நாமம் இட்டுக்கொண்ட இரண்டு மூதாட்டிகள் அந்த வீட்டில் இருந்துகொண்டு ஆமணக்கு எண்ணையைக் காய்ச்சி தருவார்கள். அன்றைய ஒரு மாலைப் பொழுதில் இந்தியாவினுடைய சௌக்கியம் என்ற மௌனத்தை உருட்டிக் கொண்டு இருக்கும் அப்போது...விளக்கெண்ணெய், ஜீரகத் தூள் மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு sugar-coated poison போல் கொடுக்கப்படும்.

ஒரே விஷயம் உண்மையானது...இந்த வீட்டு மருத்துவம் தான் நம்மை நோய் அண்டாமல் காத்து வந்தது. டாக்டர், ஹாஸ்பிடல், ஸ்கேன் எதுவும் தேவைப்படாத ஆரோக்கியமான ஒரு குடும்பமாக நாம் எழுந்து நிற்பதற்குக் காரணம், அந்த அதிகாலை வேப்பிலை, அந்தச் சூடான விளக்கெண்ணெய், அந்த மஞ்சள் கஷாயம், அந்த ரசம், அந்த சுக்கு கஷாயம்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரம். *அமிழ்தம் என்பது வேறு எங்கோ இல்லை...அம்மாவின் கைகளில் தான் இருந்தது.*

அன்புடன், பானுரவி

With love, Banooravi